கிருஷ்ணரை பற்றிய அற்புத தகவல்கள்.
மஹா விஷ்ணுவின் 9 ஆவது அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம்.
தமிழர்களால் கண்ணன், கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறார். ஆண்டுதோறும் ஆவணி மாதம் வரும் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திர நாள் கிருஷ்ண ஜெயந்தியாக (கோகுலாஷ்டமி) கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணன் பல்வேறு பெயர்களுடன் அடைமொழிகளையும் கொண்டுள்ளார்.
மோகன் என்றால் பெண்களை வசீகரிப்பவர் என்றும், கோவிந்தன் என்றால் பசுக்களை கண்டுபிடிப்பவன் என்றும், கோபாலன் என்றால் பசுக்களை பாதுகாப்பவன் என்றும் பொருள்படும்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அவரது படத்தை வைத்து திருப்பாதங்கள் வரைந்து நைவேத்தியங்கள் படைத்து வழிபடுவது வழக்கம்.
கிருஷ்ணரைப் பற்றி நாம் தெரிந்தது என்னவோ குறைவு தான். அவரைப் பற்றி தெரியாத சில விஷயங்களை தெரிந்து கொள்வோம்.
கிருஷ்ணர் (கிருஷ்ண ஜெயந்தி) அவதரித்த நாளில் அதான் கோகுலாஷ்டமி நாளில் உறியடி விழா சிறப்பாக கொண்டாப்படுகிறது. இந்த நாளில் உறியடித்து மக்கள் கிருஷ்ணரை வரவேற்கின்றனர்.
மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக நூல்களில் ஒன்று பகவத் கீதை. இது இந்துக்களின் புனித நூல். ஒரு மனிதன் தனது வாழ்நாளில் எப்படி வாழ வேண்டும்? என்பதை இந்த நூல் வலியுறுத்துகிறது. பகவத் கீதையில் உள்ள கருத்துக்களை மக்கள் பின்பற்றி வந்தால் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்று சிறப்போடு வாழலாம். அப்படிப்பட்ட பகவத் கீதையை கிருஷ்ண பகவான் நமக்கு அளித்துள்ளார்.
○ கிருஷ்ண ஜெயந்தி சென்னையில் கௌடியா மடத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.
○ வட இந்தியாவில் கண்ணையா என்றும், தமிழக மக்கள் கண்ணன் என்றும் கிருஷ்ணரை வழிபடுகின்றனர்.
○ கோகுல கிருஷ்ணன் பிறந்த கோகுலாஷ்டமியில் வெண்ணை வைத்து கிருஷ்ண பகவானை வழிபட்டு அவரை அழைத்தால் நமக்கு வேண்டிய வரங்களை அளிப்பார்.
○ கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த அப்பம், தட்டை, பால் திரட்டு, வெண்ணெய், நாட்டு சர்க்கரை, அவல், லட்டு, முறுக்கு, சீடை ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடுவது சிறப்பு.
○ கிருஷ்ணரின் பாதச்சுவடுகளை உங்களது வலது கை உள்ளங்கையை மடித்து பக்கவாட்டு பகுதியை நாமத்தில் நனைத்து கீழே வைத்து பதித்தால் அழகான விரல்களை பாதச்சுவடுகளாக பெறலாம்.
○ எப்பொழுதும் வீட்டின் வாசல் படியிலிருந்து பூஜையறை வரையில் கிருஷ்ணரின் பாதச்சுவடுகள் செல்ல வேண்டும். இந்த பாதசுவடுகள் வழியாக கிருஷ்ண பகவானே நமது வீடுகளுக்கு வருவார் என்பது நம்பிக்கை.
○ கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவு என்பதால், கிருஷ்ண பகவானை இரவு நேரங்களில் வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
○ கிருஷ்ணரின் 3 வயது வரை அவர் கோகுலத்தில் வசித்து வந்தார்.
○ கோகுலத்தில் வசித்த வந்த கிருஷ்ணர் அதன் பின்னர் பிருந்தாவனம், மதுரா என்று பல இடங்களில் வாழ்ந்து வந்தார்.
○ தனது 7ஆவது வயதில் கம்சனை வதம் செய்தார்.
○ கோகுலாஷ்டமி நாளில் கிருஷ்ண லீலை, கீத கோவிந்தம், ஸ்ரீமன் நாராயணீயம், கிருஷ்ண நாமம், கிருஷ்ண காணாம்ருதம், பகவத் கீதை ஆகியவற்றை வாசித்து கிருஷ்ண பகவானின் அருளைப் பெறலாம்.
○ ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற மந்திரத்தை சொல்லி வர நினைத்தது நிறைவேறும். பகவத் கீதையிலுள்ள அவதார கட்டத்தை சொல்லி வர புண்ணியம் அதிகரிக்கும்.
○ கிருஷ்ண ஜெயந்தி நாளில் குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களுக்கு ராதா, கிருஷ்ணன் போன்று வேடமிட்டு அலங்காரம் செய்து கிருஷ்ண பகவானை வழிபட குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அதோடு, அவர்கள் அறிவாளிகளாகவும், புத்திசாலியாகவும் விளங்குவார்கள்.
○ கிருஷ்ணரை வழிபடுபவர்களுக்கு தொழில் வளம் சிறப்பாக இருக்கும். பெயர், புகழ், கௌரவம், செல்வம், செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். மருத்துவ துறையில் இருப்பவர்கள் கிருஷ்ண பகவானை வழிபட மென் மேலும் உயரலாம்.
○ எதிரிகளின் தொல்லை நீங்க ஸ்ரீ கிருஷ்ணரின் படத்தை கூடவே வைத்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment