எவ்வளவு வேணும் முனிம்மா?
ரெண்டாயிரம் ரூபா கொடேன். அப்பால சம்பளத்துல நாலு மாசமா களுச்சுக்கோயேன்.
புது நோட்டா தான் இருக்கு. மாத்திப்பியா?
அய்யே.. துட்டா கொடுக்காதே.. கையில இருந்துச்சுன்னு வச்சுக்க, சரக்கடிக்க வேணும்னு இவன் அடிச்சே புடுங்கிடுவான்..
ஆயிரத்தை என் அக்கவுண்ட்ல இன்டர்நெட்ல போட்ரு. மீதியை பே டி எம்ல டாப் அப் பண்ணிரும்மா.
முனிம்மா, உனக்கு
பே டி எம் லாம் உபயோகப்படுத்தத் தெரியுமா ?
இன்னம்மா இப்டி கேக்குற?. எங்க வூட்டாண்ட அல்லா ஜனமும் இத்த தான் யூஸ் பண்ணுது.. சுளுவா கீது மா. எல்லா கடையாண்ட வாங்குறானே.நீ இப்ப இருபது ரூபாய்க்கு மஞ்சத்தூள் வாங்கறேன்னு வச்சுக்க,
இருபதுன்னு போன்ல அட்ச்சு இந்த ஓகே பட்டன தட்டினேன்னு வச்சுக்கோ, கருப்பு வெள்ளைல ஒரு கோடு வருதா, கடைக்காரன் இது மேல அவன் போனை இட்டாருவான். ஒரே செகண்ட் தான். பணம் எடுத்துக்கும்.
ஏம்மா நீ செய்ய மாட்டியா?
செய்வேன். தேவைப்படாது. இவரே எல்லாம் செஞ்சுருவாரு.
பணம் வாங்கிட்டு அப்படியே மட்டம் அடிச்சிராதே.போன மாசம் மட்டும் ஏழு, எட்டு நாள் வரல.
இல்லியே. மூணு நாள் தாம்மா வரல.. பாரேன்.. என்ன வேணா நம்ப மாட்ட. ஆப்பு பொய் சொல்லுமா.
இது என்னது ?
'ஆயா' ன்னு ஒரு ஆப்பு மா. நீ யார் வீட்டுல வேல செய்யற, எவ்ளோ நேரம் செய்ற. ஜி பி எஸ்ஸ ஆன் செஞ்சன்னு வச்சுக்க எங்க இருக்க ,எல்லாம் சொல்லும். இங்க பாரு , உன் வீட்டுல நேத்திக்கு இருபது பாத்திரம் களுவி கொடுத்தேனா, முந்தா நாளு முப்பது பாத்திரம் விளுந்திருக்கு பாரு. முப்பது லிட்டர் தண்ணி செலவு ஆயிருக்கு . இத்த மாதிரி எல்லாத்தயும் காட்டும்மா. வீட்டு வேல செய்யுற எங்க ஜனம் அல்லாரும் இதுலயே பேசிக்கவும் வசதி இருக்காம். என்னுது ஆண்ட்ராய்டு போன். இன்னும் ஆப்பிளுக்கு வரலயாம். அடுத்த மாசம் வருதுன்னு சொன்னாங்க.
முனிம்மா , நீ என்ன படிச்சுருக்க?
அய்யே.. நாலு கூட தாண்டல. எனக்குக் கூட ஸ்கோல் ரொம்ப புடிக்கும். எங்கே... இவன் என் மாமன் மகன் தானே.. எங்க அப்பன் அப்பவே கட்டிக் குடுத்துட்டான்.
I still don't know to use paytm
No comments:
Post a Comment