மாதம் அடிப்படை சம்பளம் ரூ.30000,
டெலிபோன் படிகள் ரூ.10000,
தொகுதி படிகள் ரூ.25000,
தபால் படிகள் ரூ.2500,
தொகுப்பு படிகள் ரூ.5000,
வாகனப் படிகள் ரூ.25000,
மாதம் மொத்த சம்பளம் ரூ.1,05,000.
சட்டசபைக்கு வந்தால் தினப்படி ரூ.500, பயணப்படி ஏசி முதல் வகுப்பு போக வர வசதிகள், இலவச பஸ்பாஸ், மாதம் இடைதங்கல்.
ரயில் படிகள் ரூ.20000,
இலவச வீட்டு
தொலைபேசி,
இலவச மருந்துகள்,
மருத்துவச் செலவு மொத்தமாக திரும்ப வழங்கப்படும்.
பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு நிதி உதவி.
இதுமட்டுமின்றி, இலவச எழுது பொருட்கள்,
37 லெட்டர் பேடு தலா 100 பக்கங்கள்,
1500 வெள்ளைத் தாள்கள்,
750 காகித உறைகள் (பெரியது),
1500 காகித உறைகள் (சிரியது),
ஹீரோ பேனா 1, சட்டமன்ற டயரி, 2
அரசு காலண்டர், சட்டசபை கூட்டங்களின்போது தற்காலிக தமிழ், ஆங்கில தட்டச்சர்கள் தற்காலிகமாக நியமனம் செய்து கொள்ளலாம்.
மேலும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க 2 ஏசி ஜிம்கள்,
சட்டசபை கூட்டத் தொடரின்போது யோகா வகுப்பு,
இலவச செய்தித்தாள்கள் 2,
எம்எல்ஏ இறந்த பிறகு குடும்பத்திற்கு மாதம் ரூ1000 குடும்ப படிகள்,
பதவியில் இருக்கும் எம்எல்ஏ இறந்தால் ரூ.2 லட்சம்,
பென்சன் பெறும் எம்எல்ஏ இறந்துவிட்டால் அவர் வாங்கிய ஓய்வூதியத்தில் 50 சதவிகிதம் பேமிலி பென்சன்
ஆகிய வசதிகள் செய்யப்படுகின்றன.
எம்எல்ஏக்களின் நிலைதான் இப்படி என்றால்,
அமைச்சர்களாக இருப்பவர்களின் சொகுசு பட்டியலை பார்த்தால் அதிர்ச்சியூட்டுகிறது.
மாநிலத்தின் 32 அமைச்சர்களுக்கு மட்டும் மாதம் தோறும், ரூ. 3.5 கோடி செலவாகிறது.
தற்போதைய நிலவரப்படி அமைச்சர்கள், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு மாதம் ரூ.5,40,07,000ம்,
ஆண்டுக்கு
ரூ.64,80,84,000ம் செலவாவதாக தமிழக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment