அரசு ஊழியர்களின் அரசு எனச் சொல்லப்படும் திமுக,
அகவிலைப்படியைத் தள்ளி வைத்த போதும்,
சரண்டர் தொகையை
தள்ளிவைத்தபோதும், எந்த அரசு ஊழியரும் கொந்தளிக்கவோ, கோபப்படவோ இல்லை. சரியான நேரத்தில் முதல்வர் செய்வார் என்றே காத்திருகின்றனர்.
ஆனால்
ஒவ்வொரு முறை நீங்கள் பத்திரிக்கையாளர்களைச்
சந்திக்கும் பொழுதும், ஊடகத்தின் வழியே அரசு ஊழியர்களை, அரசுப் பணியாளர்களை,
ஆசிரியர்களை பொதுமக்கள் முன்னிலையில் வில்லனாகக் காண்பித்து உங்களை ஹீரோவாக காட்டிக்கொள்ள முயல்கிறீர்கள்!
உங்களை
நீங்கள்
உலக மகா அறிவாளி என எண்ணிக் கொள்ளுங்கள். அதில் தவறில்லை. ஆனால் மற்றவர்களை முட்டாளாக நினைக்க வேண்டாம்.
வெள்ளை அறிக்கையில்
கடனைப் பற்றிச் சொன்னீர்கள்.
ஆனால்
உங்கள் பட்ஜெட்டில்
வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பைப் பற்றி
வாய் திறக்கவில்லையே!
கடனில் எங்களுக்குள்ள பங்கைச் சொன்ன நீங்கள், இங்குள்ள வளங்களிலும்
எங்களுக்குள்ள பங்கைச் சேர்த்துச் சொல்லுங்கள்.
சட்டசபையில்
பட்ஜெட் தாக்கலின்போது ஊதியமாக 19% ஓய்வூதியமாக 4% எனது 23 சதவீதம் மட்டுமே,
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயன்படுகிறது எனச் சொல்லி, அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு, தற்பொழுது பொது ஊடகத்தில் அரசின் செலவினங்களில் 65%
அரசு ஊழியர்களுக்காக மட்டுமே
பயன்படுகிறது
எனச் சொல்வது உங்களுக்கு அநாகரிகமாகத் தெரியவில்லை.
உங்கள் பேச்சில்
நாணயமும் இல்லை
நா நயமும் இல்லை
அரசு ஊழியர்களும், அரசுப் பணியாளர்களும்,
ஆசிரியர்களும் என எவரும்
அவர்கள் வீட்டுச் சொந்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கவில்லை.
இந்த அரசை மட்டுமல்ல,
எந்த அரசையும் இயங்கச் செய்பவர்கள் அரசு ஊழியர்களும் அரசுப் பணியாளர்களும்தான்.
எந்தப் பணியாக இருந்தாலும் அவர்கள் கொல்லைப்புற வழியாக வரவில்லை.
ஒருவேளை வந்திருந்தால், அவர்களும் அரசியல்வாதிகள் மூலமாகவே வந்திருக்க முடியும்.
உரிய கல்வித் தகுதியோடு,
உரிய தேர்வு எழுதி,
உரிய தகுதிகளோடு, எந்த ஒரு பணியையும் அடைந்திருக்கிறார்கள்.
எவரது
சொத்து மதிப்பும்
பன்மடங்கு பெருகவில்லை.
இறக்கும் வரையிலும்
கடனோடும்,
வட்டியோடுமே வாழ்ந்துவிட்டுச் சாகின்றார்கள்.
கோடித்துணி போர்த்தும்வரை,
கோடிகளைப் பார்த்ததில்லை.
நீட்டுக்கு வேட்டு எனச் சொல்லி,
எல்லா குடும்பங்களுக்கும்
1000 தருகிறோம்,
காஸ் இணைப்புக்கு
மாதம் 100 தருகின்றோம்,
கல்விக்கடன் ரத்து செய்கிறோம்,
பழைய ஓய்வூதியம் தருகிறோம்,
இழந்த
அனைத்தையும் தருகின்றோம்,
அதைத் தருகிறோம், இதைத் தருகிறோம் என
வாயில் வந்ததை எல்லாம் சொல்லித்தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்.
தமிழக முதல்வர் செய்வார் என்னும்
நம்பிக்கையோடு
நாங்களும் காத்திருக்கின்றோம்.
எந்தவித தகுதித்தேர்வும் இல்லாமல் சட்டசபைக்குள் நுழைந்திருக்கும் உங்களுக்கு
ஏன் மாதச்சம்பளம்? ஏன் பழைய ஓய்வூதியம்? கொஞ்சம் அறிவோடு சிந்திப்பீர்கள் என்று நம்புகிறோம்.
மதுக்கடைகளை மூடாமல்,
அரசை வருமானம் ஈட்டச் செய்யமுடியாது எனச் சொல்ல ஏன்
நிதி அமைச்சர்?
உங்களை நம்பி
பெரும் பொறுப்பைக் கொடுத்து, நல்லாட்சியைத் தொடங்கியிருக்கும்
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நம்பிக்கையில்
மண் அள்ளிப் போடாதீர்கள்..
சட்டசபையிலும் சரி, ஊடகத்திலும் சரி பொது வெளியிலும் சரி
உங்களிடம்
சபை நாகரிகம் என்பது அவ்வளவாக இருப்பதாக உணரமுடியவில்லை.
பேச்சால் வளர்ந்த இயக்கம்
திராவிட இயக்கம்.
உங்கள் பேச்சால்
அது
அழிந்து விட வேண்டாம்!
நன்றி!
இப்படிக்கு
தமிழக முதல்வரை நம்பும்
ஓர் அரசு ஊழியன்.
Note: இந்த அரசைக் கேள்வி கேட்கும் தகுதி எலக்சன் போது திமுகவிற்க்கு மறைமுகமாகவோ நேரடியாகவோ வேலை பார்த்த எந்த அரசு ஊழியருக்கும் இல்லை
அமைச்சர் பேசுவது தவறு எனில் ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்தட்டும் இல்லை வழக்கு கொடுக்கட்டும்.
No comments:
Post a Comment