பிற மதத்தை நான் ஏற்பேன், அவர்கள் இந்து மதத்தை ஏற்பார்களா?
நமது பண்பாடு கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டும்
நாட்டில் தேசபக்தி குறைந்துவிட்டது. தேசப்பற்று வளர்க்கப் படனும்.
நிருபர்களிடம் தெளிவான பேச்சும் பதில்களும் அளித்த ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்(புதிய மதுரை ஆதீனம்)
மேலும்,
20 ஆண்டுகளாக முந்தைய ஆதீனம் நிறுத்தி வைத்திருந்த, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அன்றாடம் அதிகாலை நடைபெறும் முதல் பூஜையும், இரவு நடைபெறும் கடைசி பூஜையும் ஆதீன மடத்தின் சார்பில் நடத்தப் பணித்துள்ளார்.
ஆதீன மடத்தில் அன்றாடப் பூஜையின் போது மடத்திற்கு வரும் அடியவர்கள், வெளியூர் யாத்திரிகர்களுக்கு அன்னதானம் வழங்கும் பணியை மீண்டும் தொடரப் பணித்துள்ளார்.
வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மடத்தில் தேவார, திருவாசகம் நடத்தும் நிகழ்வுகளையும் தொடர உத்தரவிட்டுள்ளார்.
மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 5 கோவில்களில் குடமுழுக்கு பணிகளை நிறைவேற்றுவதற்கும், தினசரி பூஜைகளை தவறாமல் தொடர்வதற்கும் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை ஆதீன மடத்திற்கு மதுரை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடைகள், வீடுகள் உள்ளன. மேலும், தூத்துக்குடி, பழனி, திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.
பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இந்த சொத்துக்கள் நெடுங்கால குத்தகை மற்றும் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதில், பெரும்பாலும் வாடகை தொகை கட்டப்படாமலும், குத்தகை இடங்களில் தனி நபர் ஆக்கிரமிப்பும் அதிகரித்து உள்ளன.
மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை முறையாக நிர்வகிப்பதில் முந்தைய ஆதீனம் தவறிய நிலையில், புதிய ஆதீனம் அவைகளை கணக்குப் பார்த்து மீட்டு பத்திரபடுத்தும் நடவடிக்கைகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment