Monday, August 23, 2021

சில படங்களில் பார்த்திருக்கலாம் சிலர் நடிப்பதே தெரியாது..!

 உதாரணம் சொல்லப்போனால் 

வி.கே.ராமசாமி..! இவர் நடிப்பதே தெரியாது..இயல்பாக பேசிக்கொண்டிருப்பார்..  ஆனால் பாத்திரம், அதன் பங்கு கச்சிதமாக முடிந்துவிடும். 


அப்படிப்பட்ட ஒரு நிலை ஆப்கானில் இந்திய அரசால் எடுக்கப்பட்டது ..என்ன செய்கிறார்கள் என்று தெரியாமலே  ஒரு மாபெரும் பணி  முடிக்கப்பட்ட கதை ..இதோ 


காந்தார  தேசமான ஆப்கான்  மகாபாரத புண்ணிய பூமி...!


உலகநாடுகள் ஆயதத்தையும்  அடிதடியையும் அனுப்பிக் கொண்டிருக்க,  பாரதம் மட்டும்தான் கல்வி, கட்டுமானம் போக்குவரத்து பணிகளில் ஈடுபட்டு 34 மாவட்டங்களிலும் கட்டுமானங்கள் செய்து சிதைந்த அந்த  நாட்டை மறுபடியும் உருவாக்கி கொண்டிருந்தது.


ஆப்கானிய மக்கள், குறிப்பாக பெண்கள் பாரதத்திடம் பேரன்பு அன்பு கொண்டிருக்கிறார்கள் .


பத்ரிக்கையாளர் ஒருவர் காபூலில் டாக்ஸியில் பயணிக்க,  அவர் இந்தியர்  என்று அறிந்ததும் , இந்தியர்களிடம் மட்டும் பாதிக்கட்டணம்தான் வாங்குவேன் என்று ஓட்டுநர் சொன்னதை வியப்புடன் எழுதி இருந்தார் . 


அமெரிக்காவின் வாபஸ் முடிவை அடுத்து தோகா பேச்சுவார்த்தை தொடங்க, எந்த நேரமும் ஆப்கான் தாலிபான்களிடம் வீழலாம்  என்று இந்தியா அறிந்திருந்தது . 


ஜனவரியில் தொடங்கியது  தயாரிப்பு வேலைகள் ..


கொரானா  அழுத்ததுடன் இதையும் சேர்ந்தே கவனித்தார் பிரதமர் 


அஜித் டோவலும் ஜெய் சங்கரும் மூன்று மாதங்களாக  பிரதமருடன் இணைந்து  உழைத்தார்கள்..


அவர்களது ப்ரையாரிட்டி இப்படி இருந்தது : 


1. இந்திய உயிர்கள் முக்கியம்.ஒருவர்கூட சிக்கிவிட கூடாது 


2. ஆப்கானிலிருந்து முந்திக்கொண்டு வெளியே ஓடிவந்து காண்ட்ரோவெர்சியில் சிக்காமல் கடைசியாக வெளியே வரவேண்டும் .


அதன் படியே ஏற்பாடுகள் திட்டங்கள் உருவாக்கப்பட்டன..


இந்திய manpower மெதுவாக வெளியே தெரியாமல் படிப்படியாக குறைக்கப்பட்டது .


இந்தியாவுக்கு ஆப்கான் நேரடி எல்லை  இல்லை..இந்தியாவின்  படைகள் அங்கே  இல்லை..எனவே .கூடுதல் கவனத்துடன் தோஹாவில் அமேரிக்கா பேச்சுவார்த்தை தொடங்கியது  முதல் இந்தியா தனது நடவடிக்கையை தொடக்கி விட்டது .


தாலிபான்கள் எந்த இடத்தையெல்லாம் தங்கள்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரு கிறார்களோ அங்கெல்லாம் இந்தியர்கள் ஓசை இல்லாமல் வெளியேற்றப்பட்டு இந்தியா  கொண்டுவரப்பட்டனர் .


முதலில் வடக்கு பகுதி 


அதன் பின் கண்டகார்  


கந்தகார் வீழ்ந்ததும் அங்குள்ள  தூதரகத்தை மூடிய இந்தியா தூதரக அதிகாரிகள்  அலுவலர்கள்  தொழில்நுட்ப வேலையாட்களை இந்தியா அனுப்பியது 


அடுத்து ஷெபெர்கான் வீழ,  அருகே Mazar-e-Sharif.  இல் முகாமிட்டிருந்த வர்கள் அனுப்பப்பட்டார்கள் .


ரசியா ஜனவரியில் வெளியேற 


துருக்கி தொடர 


இந்தியா படிப்படியாக காபூல் வீழும்வரை காத்திருந்தது.. 


காபூல் வீழ்ந்த கதை கொஞ்சம் விசித்திரமானது. 


காபூலில் சண்டை நடக்கும் ..சிலநாள் என்று எண்ணி தனது  கடைசி படைப்பிரிவை காபூலில் வைத்திருந்த  அமெரிக்கா, தளவாடங்களுடன் அகப்பட்டுக்கொண்டது . 


காரணம்..


தாலிபான்கள் காபூலில் நுழைந்தவுடன் ஒரே ஒரு புல்லட் கூட சுடாமல்  அரசாங்க படைகள் காபூலை.. அரசமாளிகையைவிட்டு வெளியேறியது..


அமெரிக்காவுக்கு நேரம் கிடைக்கவில்லை 


அதேநேரம் தயாராக இருந்த இந்திய விமானம் காபூலிலிருந்து இந்தியர்களுடன் கிளம்பியது ...


அகப்பட்டுக்கொண்ட அமெரிக்க படைகளை விடுவித்தால்  ஆயுதங்கள் தளவாடங்களை தருகிறோம் என்று பேரம்பேசி அமெரிக்க வெளியேற முயற்சிக்க,  


இந்தியாவின் அடுத்த விமானம் காபூல் விமான நிலையத்தை வட்டமிட , விமான நிலைய முழுவதும் பெரும் கூட்டம் எந்த  விமானம் கிளம்பினாலும் அதில் தொற்றும்  அவல நிலையைப்பார்த்து  இந்திய  விமானம் மூன்று  ரவுண்டு அடித்து விட்டு சிக்கலில் மாட்டாமல் திரும்ப ..


தகவல் பெற்று உள்ளூர் இந்திய விசுவாசிகள் இந்தியர்களை வேறு வழியில் வெளியற்ற..  


சுமுகமாக மொத்த இந்தியர்களும் வெளியேறினார்கள் 


இந்திய  தூதரகத்தில் நுழைந்த தாலிபான்களுக்கு அவர்களின் சொந்த குரல் எதிரொலிதான் கேட்டது.. 


கட்டிடம் வெறுமையாக இருந்தது.

 

இந்தியர்கள் கதி என்ன ?


பெண்கள்  கடத்தல் 


பிணைய கைதிகளாக இந்தியர்கள் 


 என்று எதையாவது எழுத  துடித்த இந்திய மீடியாக்கள்  இந்த அதிசயத்தை பார்த்து மலைத்து  நிற்கின்றன. 


அமெரிக்காவில் 


"  அமெரிக்க  உயிர்களை பற்றி கவலைப்படாத  ஜோ "  

என்று டிரம்ப் பேச,  ஆடிக்கொண்டிருந்த ஜோவின் இமேஜ் படுபாதாளத்தில் . 

 

இந்தியாவின் contigency திட்டம் உலகே எதிர்பாராதது...


என்னே செய்கிறார்கள்  என்றே தெரியாமல் நடந்த அற்புதமான execution அது. 


இந்திய ராணுவம் உளவுத்துறை வெளியுறவுதுறை உலகுக்கே பாடம் எடுத்த ஆபரேஷன் இது .


இதை சாதித்த 


மோடி..


ஜெய் சங்கர்..


அஜித் தோவல்..


என்ற மூவர்  அணி அமைதியாக அடுத்த வேலையை ஆரம்பித்து விட்ட்து 


அந்த வேலையின் க்ளூ மோடியின் வார்தைகளில் :


"பயங்கரவாதிகளால் நிறுவப்பட்ட அரசாங்கம் ஒருநாளும் நிலைத்ததில்லை.." 


இன்னும் ஒரு வாரத்தில் அதை எழுத வாய்ப்பு கிடைக்கலாம்..!


#ஜெய்ஹிந்த்...! ❣💪🇮🇳🇮🇳

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...