வாரத்தில் ஒருநாள் அகத்திக்கீரையை உணவில் சேர்த்து வருவதும், அன்றாட உணவில் சுண்டைக்காய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகிய உணவுகளை சேர்த்துக்கொள்வதும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
ஆப்பிள், கேரட், எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவற்றை ஜூஸாக சாப்பிடுவது நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
ஏலக்காய் தண்ணீரில் சிறிதளவு பச்சைக் கற்பூரம் கலந்து சாப்பிடலாம். அன்னாசிப் பூவை தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து குடித்துவந்தால் நுரையீரல் பிரச்னைக்கு தீர்வாக அமையும்.
தினசரி அதிகாலை வேளையில் மூச்சுப்பயிற்சி, தியானம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
வெந்நீரில் சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய்விட்டு, சிறிது நேரம் ஆவி பிடிக்க வேண்டும். இதனால் மூச்சுக்குழாயில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
பச்சைக் கற்பூரம், ஓமம், அன்னாசிப் பூ ஆகியவற்றை அரைத்து, அதை கர்ச்சீப்பின் ஒரு முனையில் வைத்து முடிந்துகொள்ள வேண்டும். அதை அடிக்கடி முகர்ந்து பார்த்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும்.
ராஸ்னாதி சூரணத்துடன் (ஆயுர்வேத மருந்துக்கடையில் கிடைக்கும்) நீர் சேர்த்து குழைத்துக்கொள்ளவும். அதை சுத்தமானத் துணியில் (கர்ச்சீப் அளவுள்ள) இருபுறமும் பூசி, நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர் அந்தத் துணியை வத்திபோலச் சுருட்டி, அதன் ஒரு முனையில் தீயைப் பற்றவைக்க வேண்டும். அதனை ஒரு கையில் எடுத்துக்கொண்டு மூக்கின் ஒரு துவாரத்தை மூடிக்கொண்டு, மற்றொரு துவாரம் வழியாக அந்தப் புகையை உள்ளிழுக்கவும். இதேபோல மற்றொரு துவாரத்திலும் மாற்றிச் செய்யவும். இப்படி ஒவ்வொரு துவாரத்துக்கும் இரண்டு முறை வீதம் வாரத்துக்கு மூன்று முறை செய்ய வேண்டும். ராஸ்னாதி சூரணத்துக்குப் பதிலாக, மஞ்சள் பொடியையும் பயன்படுத்தலாம். இவற்றைத் தொடர்ந்து பின்பற்றிவந்தால், ஆஸ்துமா, சைனஸ், நுரையீரல் அழற்சி, மூச்சுத்திணறல் போன்ற நுரையீரல் பிரச்னைகள் விரைவில் குணமாக உதவும்.
No comments:
Post a Comment