அனைவரும் சகல சௌபாக்கியங்களுடனும், ஐஸ்வர்யத்துடனும், ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ கிருஷ்ண பகவான் அருள் வேண்டி வணங்குகிறோம்.
குருகுல வாசம் முடிந்ததும் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா அவருடைய குருநாதர் சாந்தீப முனிவரிடம், குருதட்சணையாக என்ன வேண்டும்? எனக் கேட்டார். அதற்க்கு சாந்தீப முனிவரும் அவர் மனைவியும், தங்கள் ஒரே மகனை பஞ்சஜனன் எனும் அசுரன் கடத்தி கடலுக்குள் வைத்திருப்பதாகவும், அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினார்கள். கிருஷ்ணரும் அந்த அசுரனுடன் போரிட்டு குருவின் மகனை மீட்டு வந்தார். அந்த அசுரன் எரிந்து சாம்பலாகி ஒன்று திரண்டு சங்கு வடிவமானதால், அதற்கு பாஞ்ச ஜன்யம் என்று பெயர். வலம்புரிச் சங்குகளில் உச்சகட்டத் தோற்றமான பாஞ்சஜன்யம் என்ற அந்த சங்கு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் திருக்கரங்களில் தவழும் பாக்கியத்தைப் பெற்றது.
கடலில் உருவாகும் சங்குகளில் பல வகை உண்டு. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு ஆகியவற்றில் வலம்புரியாகக் கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகம சாஸ்திரங்கள்.
திருப்பதி பெருமாள் மணிசங்கு கொண்டிருக்கிறார். இவரைப் போன்றே திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி பாருத சங்கும், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வைபவ சங்கும், திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜ பெருமாள் துயிலா சங்கும் கொண்டு திகழ்கிறார்கள்.
வீட்டில் சங்கு வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள்
வலம்புரிச் சங்கில் நீர் உற்றி , அந்த சங்கை தங்கம், வெள்ளி, செம்பு போன்ற ஏதேனும் உலோகத்தில் அல்லது மரத்தில் செய்த ஸ்டாண்டில் பூஜை தட்டில் வைக்கவேண்டும்.
வலம்புரிச் சங்கு வீட்டில் இருந்தால் தோஷங்கள், துர்சக்திகள் நெருங்காமல் வீடு பாதுகாப்பாக இருக்கும்; மற்றவர்கள் பொறாமையால் வைக்கும் ஏவல்கள் நம்மை நெருங்காமல் விலகிவிடும்.
நீண்ட ஆண்டுகளாக செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தடைபட்டு வருந்தும் பெண்கள், 8 செவ்வாய்க்கிழமைகள் வலம்புரிச் சங்கில் பால் வைத்து, அங்காரகனுக்கு செவ்வரளி மலர்களால் 108 நாமாவளி அர்ச்சனை செய்தால், கைமேல் பலன் கிடைக்கும்.
பிறந்த குழந்தைகள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தால் சுத்தமான பாலை சங்கில் ஊற்றிவைத்து, விநாயகரை வணங்கி ஒரு மணி நேரம் கழித்துக் கொடுத்தால் பலன் கிடைக்கும்.
கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர 16 சங்கு வடிவங்களைக் கோலமாகப் போட்டு, பவுர்ணமி இரவில் குங்குமத்தால் அர்ச்சனை செய்து, குளிகை காலத்தில் கடன் கொடுத்தவரை சந்தித்து சிறிதளவு பணத்தைத் திரும்பக் கொடுத்தால், விரைவிலேயே முழுக்கடனும் அடைபடும்.
சொந்தமான பழைய வீடு எவருக்கும் பயன்படாமல், விற்கவும் முடியாமல் பாழடைந்து கிடந்தால்... வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில், நடுவீட்டில் பிரம்ம ஸ்தானத்தில் வலம்புரிச் சங்கை வைத்து, அதில் வாஸ்து பகவானை எழுந்தருளச் செய்து, மஞ்சள், துளசி இட்ட நீரை வைத்து பூஜிக்கவேண்டும். பிறகு சங்கு தீர்த்தத்தை வேப்பிலையின் உதவியோடு வீடு முழுவதும் தெளிக்கலாம். அத்துடன், செப்பு நாணயம் ஒன்றை மஞ்சள் துணியில் முடிந்து, ஈசான்ய பாகத்தில் கட்டிவிட்டால், விரைவில் அந்த வீட்டை விற்கவோ புதுப்பிக்கவோ நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றிபெறும்.
குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் வலம்புரிச் சங்கில் பால், குங்குமப்பூ இட்டு சந்தான கணபதியை வேண்டி, பூஜையை செய்து, 48 தினங்களுக்கு கணவருடன் சேர்ந்து அருந்திவந்தால் பலன் கிடைக்கும்.
ஒருவர் தமது நட்சத்திர அதிதேவதையையும், லட்சுமிகுபேரனையும் யோக எண் மற்றும் (சிறிய) பட உருவில் வலம்புரிச் சங்கில் வைத்து, சில காசுகளும் போட்டு வைத்து தினமும் வழிபட, அபரிமிதமான செல்வச் சேர்க்கை உண்டாகும்.
கோயில்களில் 108 அல்லது 1008 இடம்புரி சங்கில் நீர் வைத்து நடைபெறுகிற சங்காபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு வழிபட தோஷங்கள் விலகும்; செல்வம் சேரும்.
No comments:
Post a Comment