அந்தப் பெண்மணி கணவனிடமிருந்து விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
விசாரணைக் கூண்டில் நின்ற அப்பெண்ணிடம் குறுக்கு விசாரணை செய்யும் பொழுது வக்கீல் கேட்டார்,
"உங்கள் பெயர் என்ன?''
அந்தப் பெண் "கமலம்'' என்றாள்.
"ஏன் உங்கள் கணவரை விவாகரத்து செய்கிறீர்கள்?'' என கேட்டார் வக்கீல்,
அதற்கு அவள் "தூக்கத்தில் அவர் அடிக்கடி வேலைக்காரியின் பெயரைச் சொல்கிறார்'' என்றாள்.
"அவள் பெயர் என்ன?'' அடுத்த கேள்வியை கேட்டார் வக்கீல்.
"அவள் பெயரும் கமலம் தான்" எனப் பதிலளித்தாள்.
வக்கீலுக்கு ஆர்வம் தொற்றிக் கொள்ள சீரியஸாக கேட்டார்,
"உங்கள் பெயரும் கமலம். வேலைக்காரி பெயரும் கமலம். அப்படியிருக்க உங்கள் கணவர் தூக்கத்தில் உங்கள் பெயரையே சொல்லியிருக்கலாமல்லவா?''
அந்தப் பெண் வேகமாக தலையாட்டி மறுத்து சொன்னாள்.
"நிச்சயமாக அந்த ஆள் என் பெயரைச் சொல்லியிருக்கமாட்டார்"
இப்போது நீதிபதி குறுக்கிட்டு கேட்டார்,
"ஏன் அப்படி உறுதியாக சொல்கிறாய்?"
நீதிமன்றத்திலுள்ள அனைவரையும் ஒருமுறை பார்த்து சத்தமாக சொன்னாள்,
"ஏனென்றால் என் பெயரைச் சொல்லும் அளவுக்கு அந்தாளுக்குத் தைரியம் ஏது?''
படித்ததில் பிடித்தது, பிடித்ததில் ரசித்தது, ரசித்ததில் பகிர்ந்தது!!
Anti climax !
வே.காரி : இல்லை அவர் என் பேரை சொல்லலை...
நீதிபதி : ( வேலைக்காரியிடம்..)
அதெப்படி.. அவர் உன் பெயரை சொல்லவில்லை என்று அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..?
வே.காரி : என்னை அவர் எப்பவுமே டார்லிங் னு தான் கூப்பிடுவார்.. என் பேரைச் சொல்லி கூப்பிடுங்க ரொம்ப ஆசையா இருக்குன்னு பல முறை சொல்லியிருக்கேன்.. அந்தச் சனியனை நினைவு படுத்தாதே.. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்னு ரொம்ப கோபப்படுவாருங்க, எஜமான்..
நீதிபதி :
Anti climax to Anti climax..
..
நீதிபதி : அப்படியானால் இவர் மீதான குற்றம் சந்தேகமற நிரூபிக்கப்படவில்லை என கேஸை தள்ளுபடி செய்கிறேன்..
மனைவி & வேலைக்காரி :
அதெப்படீங்க எசமான்..
அப்படீன்னா, அந்த மூணாவது கமலம் யாருன்னு கண்டுபிடிச்சு சொல்லுங்க..
நீதிபதி :
No comments:
Post a Comment