Monday, August 30, 2021

"ஊருக்கு தான் உபதேசம்"னு சொல்வாங்க நாம் வழக்கத்தில் கேட்டிருப்போம்.

 உதாரணம் "குடி குடியை கெடுக்கும்"

"புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு" போன்ற பொன்மொழிகள்
"பொய்பேசக்கூடாது"
"வெளிப்படையா பேசணும்"
போன்ற நல் வார்த்தைகளை பிறர்க்கு சொல்லிவிட்டு தான் மட்டும் அதிலிருந்து விலகி இருப்பார்கள்
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக
இது கல்வி க்குமட்டுமல்ல சொல்லாலும் செயலாலும் நாம் நடந்து கொள்ளும் ஒழுக்கங்களுக்கும் அப்படியே பின்பற்ற வேண்டும்
முற்றும் துறந்த சாமியார் ஒருவர் நடந்து வரும் வழியில் சில இளவயது சிறுவர்கள் ஒரு ஆமையை கல்லாலும் குச்சியாலும் பலமாக அடித்து கொண்டிருந்தனர் அதை பார்த்த சாமியார் "டேய் பசங்களா,ஆமையை எவ்ளோ அடித்தாலும் அது சாகாதுடா ஏன்னா அதன் ஓடு தாங்கிக்கும்,
ஆனா அதை திருப்பி போட்டு அடித்தால் ஒரே அடில செத்துடும்" என்று சொல்லிட்டு, "சிவ சிவ நீங்கள் அப்படி செய்யாதீர்கள் அது பாவம்" என்று சொல்லிட்டு போய்விட்டாராம்.
சிறுவர்கள் என்ன செய்வார்கள்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...