Monday, August 30, 2021

மக்கள்திலகம்.

 விழுப்புரம் வழியாக காரில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு பெட்ரோல் பங்க் அருகில் காரை நிறுத்தச்சொன்னார். தன் உதவியாளரை அழைத்து, இடதுபுறமாக இருபது கடை தாண்டி ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருப்பார்...அவரிடம் வடை வாங்கிக்கொண்டு நில். உனக்கு நேராக காரை நிறுத்துகிறோம்...காரில் ஏறும்போது அந்தப் பாட்டியின் கையில் கொடுக்காமல் அந்த வடை வைத்திருக்கும் ட்ரேயில் போட்டுவிட்டு வந்துவிடு என்று கூறினார்... அந்த உதவியாளரும் அப்படியே செய்தார்... காரும் புறப்பட்டுவிட்டது...

தனக்கு திடீரென இருநூறு ரூபாய் கிடைத்ததும் வடை சுடும் பாட்டி திகைத்தார்.
அதைக்கண்ட நம் வள்ளல் புன்வுறுமல் பூத்தார்...
உதவியாளர், எம்ஜிஆரிடம், " ஏன் அந்தப்பாட்டிக்கு 200 ரூபாய் கொடுத்தீர்கள் ? என வியப்புடன் கேட்க ...
அதற்கு எம்ஜிஆர், "அந்த 200 ரூபாய் வடைக்கு இல்லை.. #அந்தப் #பாட்டியோட #தன்னம்பிக்கைக்கு, #தளராத #முயற்சிக்கு, இந்த வயதில் சுயமாக உழைச்சுப் பிழைக்கிற, அந்த #வயதான #தாயை #கௌரவிக்க ஆசைப்பட்டேன்" என்றார்...
இப்படியே ஒவ்வொரு முறை விழுப்புரத்தைத் தாண்டும் பொழுதும் வடை வாங்குவதும், 200 ரூபாய் போடுவதும் ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது...
இந்த மாயாஜால வித்தையால் குழம்பிய பாட்டி, "யார் மூலம் பணம் வருகிறது? " என்பதை கண்டறிய எண்ணினார்...
ஒருநாள்...
இதே போல உதவியாளர் பாட்டியிடம் வடை வாங்கி, பணத்தைப் போட யத்தனித்து, பாட்டி அந்த இருப்பிடத்தில் இல்லாததைப் பார்த்து திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார்...
அங்கே... எம்ஜிஆரை காரில் பார்த்து அடையாளம் கண்டுகொண்ட அந்த மூதாட்டி கண்ணீர் மல்க பேசினார்...
" #என் #மவராசா ! நீ தான் இத்தனை வருசமா நான் சுட்ட வடையை விரும்பி சாப்பிடறியா ? தங்கபஸ்பம் சாப்பிடுற ராசாவா இந்த ரோட்டோரம் விக்கிற வடையை வாங்கித் தின்னே ! #தினம் #ஆயிரம் #குடும்பங்களுக்கு #படியளக்கிற #மகராசா, நான் சுட்ட வடையை நீ தின்னதுக்கு, நான் கோடிப்புண்ணியம் பண்ணியிருக்கணும். ஆனா நீ லாட்டரி சீட்டுல பணம் விழுற மாதிரி ஒவ்வொரு முறையும் இருநூறு ரூபாய் கொடுத்து என்னைப் பாவியாக்கிட்ட " என்றார்.
அதற்கு எம்ஜிஆர், "#நான் #உங்களுக்கு #கொடுத்ததை, #உங்க #மகன் #கொடுத்ததா #நினைச்சுக்குங்க. சீக்கிரமா நான் அரசாங்கத்திடம் சொல்லி இதே பணத்தை மாசாமாசம் உங்களுக்கு பென்சனா தரச் சொல்றேன் " என்று சொல்லி விடைபெற்றார்...
தனது வாக்குறுதிக்கேற்ப, தான் முதலமைச்சரான பிறகு "முதியோர் பென்சன் திட்டத்தை" அமலாக்கி அதன் மூலம் மாத உதவித்தொகை, நாள்தோறும் மதிய உணவு, ஆண்டிற்கு இருமுறை இலவச உடை, ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி வரலாறு படைத்தார்
அந்தப் பாட்டியும் தனது இறுதிக்காலம் வரை இத்திட்டத்தினால் பயன் பெற்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது...
இப்படி மக்களின் குறைகளைப் பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி தந்தவர் தான் பொன்மனச்செம்மல்!
May be an image of 1 person and sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...