Thursday, August 26, 2021

தேடல்.......

 தேடிக்கொண்டிருக்கும் போதுதான்

அதனைத் தொலைத்தேன்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
அலைந்தலைந்து தேடுகிறேன்.
கண்டறிவதைவிட தேடுவதில்தான்
கவனம் செலுத்துகிறேனோ?
இருக்கும் இடத்திலேயே
கிடைக்கும்அது என்றார்கள்
நானிருக்கும் இடத்திலேயா?
அதுவிருக்கும் இடத்திலேயா?
அர்த்தம்புரியாமல் தேடுகிறேன்
அறியமுடியாமல் தேடுகிறேன்.
ஆறுதல் மொழிகளில்
அதுகிடைக்கும் என்றார்கள்,
அகப்பட்டதைச் சுருட்ட
ஆற்றுவதை அறிந்தேன்;
அன்பான சூழ்நிலையில்
அதுகிடைக்கும் என்றார்கள்,
அன்பைப்பெறவே பெருங்கூட்டம்
அளிப்பதற்கோ யாருமிலர்.
ஆகையினால் தேடுகிறேன்
அடுத்தடுத்து தேடுகிறேன்.
மதங்களில் தேடினேன்
மண்டை காய்ந்தது,
பகுத்தறிவில் தேடினேன்
பதுங்கிக் கொண்டது,
தத்துவத்தில் தேடினேன்
தவிப்பைத் தந்தது,
அறிவியலில் தேடினேன்
அர்த்தம் இழந்தது.
இருப்பதே அதற்கெதிரோ
இறப்பில்தான் கிடைத்திடுமோ?
பலவாறாய் யோசித்தேன்
பலரிடமும் யாசித்தேன்
சரியாகச்சொல்ல ஆளில்லை
சரியென்றுஏற்க வழியுமில்லை.
தேடுவதை நிறுத்திவிட்டேன்
தேடியதைக் கண்டுகொண்டேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...