Monday, August 23, 2021

*எண்ணங்களை_சீராக்கி_வாழ்க்கையை_நேராக்குவோம்...*

 *எண்ணங்களை மாற்றினால் எல்லாமே மாறிவிடும் என்று தெரிகிறது. ஆனால், அதை அன்றாட வாழ்க்கையில் முக்கியமான தருணங்களில் மறந்துவிடுகிறோம். எல்லா எண்ணங்களும் நல்லவை என்று நம்பிவிடுகிறோம். மோசமான எண்ணத்துக்கான மோசமான பலன்கள் வரும்போது, “இது எப்படி நிகழ்ந்தது?” என்று ஆச்சரியமாகக் கேட்கிறோம். நம் எண்ணங்கள்தாம் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் பெரும் காரணிகள் என்றால் அதை ஏன் கவனித்துச் சீராக்கத் தவறுகிறோம்?*

*எதை வேண்டாம் என்று யோசிக்கிறோமோ அதுதான் கரு. ஆகக் கூடாது என்பது உள் நோக்கம். ஆனால், மனத்தின் கற்பனை ஓட்டத்தில் நிகழ்வது எதை வேண்டாம் என்று நினைக்கிறோமோ அதுதான். அது உள் மன ஆற்றலிலும் உடலின் ஒவ்வொரு அணுவுக்கும் இந்தச் செய்தியைப் பலமாகக் கொண்டுசெல்கிறது. அது நடப்பதற்கான சூழலை உங்கள் மனம், உடல், உங்களைச் சுற்றிய பிரபஞ்ச சக்தியும் ஏற்படுத்தும். மிக எளிய அறிவியல் உண்மை.*
*உங்கள் எண்ணம் ஒரு படமாகத்தான் உள்மனத்தில் பதிவுசெய்யப்படுகிறது. அச்சு எழுத்துகளால் அல்ல. அதனால் காட்சி வடிவத்துக்கு உண்மையா பொய்யா, நன்மையா தீமையா என்ற பாகுபாடு கிடையாது. எண்ணங்களைக் கற்பனையில் சம்பவங்கள்போல ஓட்டிப் பார்ப்பது மனத்தின் வேலை. திரைப்படம் பார்க்கும்போதுகூட உணர்ச்சிவசப்படுவது இதனால்தான். கண் முன்னால் நடப்பது மாயை என்றாலும் உடலும் மனமும் அதை நிஜம்போலத்தான் பாவிக்கின்றன.*
*ஒரு படத்தைவிட ஆயிரம் மடங்கு வீரியம்கொண்டவை எண்ணங்களால் தயாராகும் உள்மனப்படங்கள். காரணம் அவை ஒரே காட்சியைப் பலமுறை ஓட்டிப் பார்க்கும். ஏன்? ஒரே எண்ணத்தைத்தானே நாம் பலமுறை நினைத்து நினைத்துப் பார்க்கிறோம்.*
*கண்ணாடி டம்ளரில் தண்ணீரை வழிய வழிய எடுத்துக்கொண்டு மெல்ல நடந்து வருகிறது ஒரு குழந்தை. உடனே, “கீழே விழுந்து கண்ணாடி டம்ளர் உடைந்து அடிபடுமோ” என்ற எண்ணமும் ஒரு சித்திரமும் உங்கள் மனத்தில் ஓடுகின்றன. “கீழ போட்டுறப் போற… பாத்து!!” என்று அலறுகிறீர்கள். உங்கள் நோக்கம் குழந்தையின் பாதுகாப்புதான். ஆனால், நீங்கள் “கீழ போட்டுறப் போற... பாத்து!!” என்றவுடன், அதுவரை நம்பிக்கையோடு சென்ற குழந்தை, “கீழே போட்டால் அடி உறுதி” என்ற எண்ணத்தின், உள்மனத் திரையாக்கத்தின் விளைவால் கூடுதல் பிடியுடன் டம்ளரை இறுக்க, அது நழுவிக் கீழே விழுந்து உடைகிறது.*
*உடனே நீங்கள் சொல்வீர்கள்: “நான் சொன்ன மாதிரியே நடந்துச்சு பாத்தியா?” (உண்மையில் நீங்கள் உங்கள் எண்ணத்தால் புரிந்த சாதனைதான் அது!)*
*எண்ணங்களை சீராக்கி, வாழ்க்கையை நேராக்குவோம்.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...