தமிழ் சினிமாவின் இன்றும் சரியான அங்கீகாரம் கிடைக்காத இயக்குநர் ஒருவர் உண்டு என்றால் .. அது சாட்சாத்
R.சுந்தர்ராஜன் தான்.
1982 ம் வருடம் தமிழ் சினிமாவின் வெள்ளி விழா படங்களில் முக்கிய இடம் பெற்ற படம். பயணங்கள் முடிவதில்லை
மோகன்.பூர்ணிமா .எஸ் . வி.சேகர், ரஜனி போன்றோர் நடித்த
இளையராஜாவின் இசையில் இளையநிலா பொழிகிறதே,
ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா
போன்ற பாடல்கள் மூலம் பட்டி தொட்டி எங்கும் கிட்டதட்ட 565 நாட்கள் ஓடி சாதனை படைத்த படம்.
அதுதான் பயணங்கள் முடிவதில்லை' இந்த படத்தின் மூலம் சுந்தர்ராஜன் என்ற புதுமுக இயக்குநர் அறிமுகம் .
தொடர்ந்து அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை, சரணாலயம், சுகமான ராகங்கள் என்ற சுமாரான படங்கள்
அடுத்து மறுபடியும் இளையராஜாவுடன் இணைந்து மோகன், ரேவதி இணையில் குங்குமச் சிமிழ்
கூட்ஸ் வண்டியிலே.
நிலவு தூங்கும் நேரம்
பூங்காற்றே
மச்சான அள்ளிக் கடி
போன்ற பாடல்கள் அழகான கதை
மோகனின் நடிப்பு என படம் சூப்பர் ஹிட்
வைதேகி காந்திருந்தாள் , விஜய்காந்த், ரேவதி, ராதாரவி என நட்சத்திரங்களோடு
இளையராஜாவின் இசையில்
ராசாத்தி உன்ன காணாத நேரம்
அழகு மலர் ஆட
மேகங்கருக்கையிலே
என ஆல் டைம் ஹிட் பாடல்கள்
தண்ணீர் இல்லாம ஒருத்தி சாகுறா
தண்ணீரில் ஒருத்தி வாழ்க்கை இழக்கிறாள். இந்த இருவரும் இணைந்து ஒரு காதலை சேர்த்து வைத்துக் கொள்ளும் கதை தான் .இந்தப் படம்.
அம்மன் கோயில் கிழக்காலே ,
திருமதி பழனிச்சாமி,
சாமி போட்ட முடிச்சு.
தாலாட்டு பாட வா
நான் பாடும் பாடல்
மெல்லத் திறந்தது கதவு
ராஜாதிராஜா
குங்கும் ச்சிமிழ்
என இளையராஜாவுடன் இணைந்து அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்
தழுவாத கைகள் கை நழுவியது
விஜய்காந்துக்கு நிறய்ய ஹிட்கள் கொடுத்திருந்தார்.
பின்பு தேவாவுடன் என் ஆசமச்சான் ஹிட்.
விஜய்யை வைத்து காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற படம் எடுத்தார்
படம் ப்ளாப்
சீதனம் / காந்தி பிறந்த மண் என்ற
படங்கள் தோல்வி
இறுதியாக சித்திரையில் நிலாச்சோறு
என்ற படம் ராஜாவின் இசையில்
படம் தோல்வி.
இயக்குநராக மட்டும் இல்லாமல்
காமெடி' குணசித்திர வேடங்களில் நடித்தார்.
உன்னை நினைத்து படத்தின் காமெடி ரசிக்க வைத்து காமெடி
பல ரசிக்க வைக்கிற படங்களை எடுத்த இந்த ராஜன் இன்றும் ரசிக்கக்கூடிய இயக்குனர்தான் .
இப்போது சின்னத்திரையில் கல்யானவீடு என்ற சீரியலில் நடிக்கிறார் காலங்கள் மாறலாம் ஆனால் சுந்தர்ராஜனின் இடம் இன்னும் காலியாகவே உள்ளது
நன்றி உங்களில் ஒருவன்
இவரது படங்கள் பற்றிய உங்கள் பார்வைகள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.
No comments:
Post a Comment