தி.மு.க.,விற்கும், அ.தி.மு.க.,விற்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை; இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது தெளிவு!
தற்போது, கொரோனா நோய் பரவல் வெகுவாக குறைந்து விட்டது என ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.அனைத்து அலுவலகங்கள், கடைகளும் முழுமையாக இயங்கலாம். 'ஷாப்பிங் மால், தியேட்டர்' திறக்கலாம். அனைத்து போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.'டாஸ்மாக்' கடை ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள நிலையில், மதுபான விடுதிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.கல்வி நிலையங்கள் திறக்கலாம்; அரசியல் கூட்டம் நடத்தலாம்; மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலை மோதலாம்; இவற்றில் எதிலுமே கொரோனா பரவாது.
ஆனால், கோவிலை திறந்தால் மட்டும் நோய் தொற்று வந்து விடும்!எனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் மட்டும் கோவில்கள் திறக்கப்படாது. இது, தமிழக அரசின் உத்தரவு.மனிதனுக்கு நிம்மதி தரும் ஒரே இடமான கோவிலை திறக்கக் கூடாது. ஆனால், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு வழிவகுக்கும் 'டாஸ்மாக்' கடையை திறக்கலாம் என தி.மு.க., அரசு உத்தரவிடுவது எவ்விதத்தில் நியாயம்?
பழநி, திருச்செந்துார், மதுரை, ராமேஸ்வரம், சமயபுரம் ஆகிய இடங்களில் உள்ள பக்தர்கள் அதிகம் கூடும் பிரபலமான கோவில்களுக்கு மட்டும் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் அனுமதி இல்லை என்றால், அது ஓரளவு நியாயம் இருக்கும்.அதை விடுத்து, தமிழகத்தில் உள்ள சிறு சிறு கோவில்கள் கூட திறக்கக்கூடாது என உத்தரவிடுவது எவ்விதத்தில் நியாயம்??????
No comments:
Post a Comment