Tuesday, October 12, 2021

பொய்தகவல்களை பரப்பி சுய இன்பம் காண்கிறார் கள் சில மேல் தாவி கள்...

 ஒரு பொய்யான தகவலும்...

சுய இன்பம் கானும் மேல் தாவி களும்...
அந்த வேட்பாளர்
அவர் பாஜக வேட்பாளர் இல்லை.
அவர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடவில்லை.
சுயேச்சை வேட்பாளர்.
அவர் போட்டி யிட்ட 9 வார்டில் அவர் குடும்பத்தினர் ஓட்டு இல்லை 4 வது வார்டில் தான் அவர் குடும்பத்தினர் வாக்கு உள்ளது.
அவர் குடும்ப வாக்குகள் எந்த வார்டு...
அவர் போட்டி யிட்டது எந்த வார்டு என்ற எந்த உண்மையையும் தெரிந்து கொள்ளாமல் பொய்தகவல்களை பரப்பி சுய இன்பம் காண்கிறார் கள் சில மேல் தாவி கள்...
உண்மை தகவல்கள் தெரிந்து கொண்டு பதிவு போடுங்கள் மேல் தாவி க்ளே...
நுனி புல் மேய வேண்டாம்..
கோவையில் வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் பாஜகவை சேர்ந்த வேட்பாளர் 1 ஓட்டு மட்டும் வாங்கியதாக சிலர்
சமூகவலைதளங்களில் பதிவு போடுகிறார்கள்
கோவை மாவட்டத்தில் 13 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9 ஆவது வார்டு உறுப்பினருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முடிவில் இந்த வார்டில் மொத்தம் 1,551 வாக்குகள் இருந்த போதிலும் 913 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இதில் கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட திமுக கட்சியை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சங்கு சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக வின் வைத்தியலிங்கம் 196 வாக்குகளும் பாஜக வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக், சுயேட்சையாக கார் சின்னத்தில் போட்டியிட்டு ஒரே ஒரு வாக்கை மட்டுமே பெற்றார்.இந்நிலையில், பா.ஜ., இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் கார்த்திக்கு, அவரது குடும்ப உறுப்பினர்கள் கூட ஓட்டுபோடவில்லை என சமூகவலைதளங்களில் டிரெண்டிங் செய்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கார்த்திக் கூறியதாவது:, 9வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரு வாக்கு மட்டுமே வாங்கியதாக வரும் செய்திகள் முற்றிலும் தவறானது. நான் இருப்பது 4வது வார்டில் எனக்கும், எனது குடும்பத்திற்கும் அங்கு தான் ஓட்டு உள்ளது. இடைத்தேர்தல் வருவதையொட்டி, 9வது வார்டில் போட்டியிட்டு பார்ப்போம் என அங்கு போட்டியிட்டேன். எனது குடும்ப சூழ்நிலை காரணமாக சரிவர பிரச்சாரம் செல்ல முடியவில்லை. நான் அந்த வார்டில் நிற்கிறேன் என்பதை யாருக்கும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. எனினும், எனக்கு ஒரு ஓட்டு கிடைத்திருக்கிறது. அதையே நான் வெற்றியாக எடுத்துக்கொள்கிறேன்.
மீண்டும் அடுத்த தேர்தலில் நான் போட்டியிடுவேன். 4வது வார்டில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை அடைவேன். பாஜகவுக்கும் பெருமை சேர்ப்பேன் என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...