9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பின்னடைவை சந்தித்துள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளில் மாநிலத்தை ஆளும் தி.மு.க.,வே முன்னிலை வகித்து வருகிறது.
9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி, தி.மு.க., முன்னிலை வகிக்கிறது.
1391 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில், 175 இடங்களில் முன்னிலை நிலவரம் தெரிந்துள்ளது.
அதில்,
தி.மு.க., -144
அ.தி.மு.க., - 16
பா.ம.க., -7
அ.ம.மு.க., -2
சுயேட்சைகள் - 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.
140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 61க்கு முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது.அதன்படி, திமுக 58லும், அதிமுக 3லும் முன்னிலை வகிக்கிறது.
9 மாவட்டங்களில் 3,007 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு இதுவரை 240 பேரும்,23,211 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,573 பேரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மாவட்ட நிலவரம்
மாவட்ட கவுன்சிலர் பதவிகள் முன்னிலை நிலவரம்

ஒன்றிய கவுன்சிலர் பதவி முன்னிலை நிலவரம்

தி.மு.க., வேட்பாளர் வெற்றி
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியம், திவான்சாபுதுார் ஊராட்சியில், 8,556 வாக்காளர்கள் உள்ளனர். தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில், தி.மு.க., ஆதரவில் வேட்பாளர் கலைவாணி, அ.தி.மு.க., ஆதரவில் வேட்பாளர் சரோஜினி போட்டியிடுகின்றனர். கடந்த, 9ம் தேதி நடந்த வாக்குப்பதிவில், 76.47 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது.
இன்று (12ம் தேதி), 3 மேஜைகள் அமைக்கப்பட்டு, நான்கு சுற்றுக்களாக ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில், அ.தி.மு.க., வேட்பாளர் சரோஜினி, 2,075 வாக்குகள் பெற்றார். தி.மு.க., வேட்பாளர் கலைவாணி, 4,372 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 105 செல்லாத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. 25 ஆண்டுக்குப்பின் திவான்சாபுதூரில் தி.மு.க.,வினர், அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

No comments:
Post a Comment