Friday, October 8, 2021

'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' புகழ் மதுரை போலீஸ் துணை கமிஷனர் இடமாற்றம்.

 மதுரையில் ஆயில் மசாஜ் செய்த உடலோடு, உள்ளாடையுடன் 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' பாடலை புல்லாங்குழலில் கேட்டு ரசித்த ஆயுதப்படை துணைகமிஷனர் சோமசுந்தரம், தினமலர் செய்தி எதிரொலியாக சென்னை ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' புகழ் மதுரை போலீஸ் துணை கமிஷனர் இடமாற்றம்


துணைகமிஷனர் சோமசுந்தரம், ஏற்கனவே மதுரையில் உதவிகமிஷனராக இருந்தபோது இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியவர். பின்னர் துாத்துக்குடி, சென்னை போன்ற இடங்களில் பணியாற்றிவிட்டு பதவி உயர்வுடன் மதுரை வந்தார். சில நாட்களுக்கு முன் உள்ளாடையுடன் ஆயில் மசாஜ் செய்த உடலோடு இவர் அமர்ந்திருக்க, அருகில் போலீஸ்காரர் ஒருவர் புல்லாங்குழலில் 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' பாடலை இசைத்தார்.

அருகில் காலி மதுபாட்டில் இருந்தது.கண்ணியமிக்க போலீஸ் பதவியில் இருந்து கொண்டு சோமசுந்தரம் தன் சொந்த விஷயங்களுக்கு போலீசாரை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்த நிலையில் நேற்று சென்னை ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...