ஏன்டா, தம்பி ஓரே டென்ஷனா இருக்கே?
பின்ன என்னண்ணே ஆன்லைன்ல ஆர்டர் பன்னுனா
இந்தி தெரியாதான்னு கேக்குறாங்க!
சரி, எந்த கம்பெனியில ஆர்டர் செஞ்சே?
ஜொமேட்டோ.
நீ போட்ருக்குற சட்டை எந்த கம்பெனி?
வான்கூஷன்.
பேண்ட்?
பீட்டர் இங்லேண்டு.
அடிக்குற சரக்கு?
ஜானிவாக்கர்.
வீடு கட்னியே, எந்த சிமெண்ட்டு?
டால்மியா சிமெண்ட்.
குடிக்கிற குளிர்பானம்?
ஃபெப்சி ண்ணே.
அப்பப்ப ஒருத்தன் பைக்ல பெரிய மூட்டையா கொண்டாரானே, என்ன அது?
அமேசான் ஆன்லைன் பர்சேஸ் ண்ணே.
பல்லு.... சரி சரி... நீ எப்பயாவது தான் வெளக்குவே என்ன பேஸ்ட்டு?
கோல்கேட் ண்ணே.
பாக்குற டிவி சானல்?
Sun TV ண்ணே.
எந்த மொபைல் நெட்வொர்கு?
Jio ண்ணே.
சரி, ஆன்லைன்ல சாப்புட அப்பிடி என்ன ஆர்டர் பண்ணுன?
ஃபீஸா
பர்கர்
அரேபியன் டிலைட் சிக்கன்.
அப்பிடியா சரி சரி,
போட்ருக்குற செருப்பு எந்த கம்பெனி?
Bata ண்ணே.
சரி, கொஞ்சம் கழட்டி கொடு.
எதுக்கு ண்ணே?
உன்னை எல்லாம்
ஏஞ்செருப்பால அடிக்க கூடாது டா
அது ஏஞ்செருப்புக்கு அசிங்கம்.
ஏன்ணே, இப்பிடி திட்ரீங்க?
ஏன்டா, உடுத்துற உடுப்புல இருந்து
திங்கற கருமம், பாக்குற டிவி பேசுற சிம்மு, போட்ருக்குற செருப்பு, கட்டுற சிமெண்ட் ல, இருந்து எதுவும் நம்மதில்லே, நீ ஆர்டர் பண்ணுனதை Zomato, இதுல தமிழை தண்ணி ஊத்தி வளக்கப்போறியாக்கும்,
ஓடிப்போடா... அடிச்சே கொன்னுடுவேன்...
No comments:
Post a Comment