****************************************
தைப்பூசத்து அன்று முருகனை எப்படி வழிபட வேண்டும்?... என்ன செய்ய வேண்டும்?
இந்த தைப்பூசத் திருநாளன்று முருக பெருமா னை உலகெங்கிலும் வழிபடு வது நமக்குத் தெரிந்தது தான். தமிழர்களின் வாழ்வோடு கலந்தவன் இந்த சிவகுமாரன்.
அதாவது சிவபெருமான் மற்றும் பார்வதியின் இளைய குமாரன் என்பதால் சிவகுமாரன் என்றும் அழைக்கப்படுகிறார். இவரை சாதார ணமாக சிவனின் மகன் என்று மட்டும் சொல்லி விட முடியாது. முருகனுக்கென்று ஏராளமான பெருமைகளும் பராக்கிரமங்களு ம் இருக்கின்றன.
தேவர்களின் சேனாதிபதி
********************************
தேவர்களுக்கே சேனாதிபதியாக திகழ்ந்தவர் தான் இந்த முருகப் பெருமான். ஆம். தேவர்களுக்கும் ரிஷி முனிவர்களுக்கு பெரும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான் சூரபத்மன் என்னும் அரக்கன். அவனை அழிப்பதற்காகவே சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து அவதரிக்கச் செய்ய பட்டவர் தான் நம்முடைய முருகன்.
ஆறுபடை வீடுகள்
***********************
மற்ற எல்லா நாட்களிலும் எல்லா முருகன் கோவில்களிலும் ஒரே மாதிரியான பூஜைகள் நடைபெறும். ஆனால் தைப்பூசம் என்பது அப்படியல்ல. எல்லா முருகன் கோவில்களி லும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆனால் மற்ற ஆலயங்களை விட முருகளின் ஆறுபடை வீடுகளில் தைப்பூசத்துக்கென்றே சிறப்பு அபி ஷேகங்கள், பூஜைகள், வழிபாட்டு முறைகள் உண்டு.
தொட்டது துலங்கும்
**************************
தைப்பூசத்தன்று தொட்ட காரியமெல்லாம் துல ங்கும் என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிரு ப்போம். அது வெறும் வாய்மொழி வார்த்தை கிடையாது. தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் பௌர்ணமியும் சேர்ந்து வருகிற நாளை தான் நாம் முருகனுக்காக தைப்பூசத் திருவிழாவாக கொண்டாடுகிறோம்.
நேர்த்திக்கடன்கள்
***********************
நம்முடைய ஊர்களில் திருவிழாக்களில் அலக குத்தி நேர்த்திக்கடன் செய்வதைப் பார்த்திருப் போம். அதேபோல் மற்ற எந்த கடவுளுக்கும் இல்லாமல் முருகளுக்கு இந்த தைப்பூச நாளில் குறிப்பாக, பக்தர்களால் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றப்படும். அதில் மிக முக்கியமானதாகச் சொல்ல வேண்டுமென்றா ல், வேலெடுத்தல், நாக்கில் வேல் குத்துதல் (அலகு குத்துதல்), பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என விதவிதமான காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.
வேல்முருகன்
*******************
முருகனுக்கு நிறைய பெயர்கள் இருப்பது நம க்கு தெரிந்ததுதான். ஆனால் வேல் முருகன் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? ஈசன் முருகனுக்கு உயிரைக் கொடுத்தான். ஆனால் பார்வதி தேவியோ தந்தையிடம் கோவித்துக் கொண்டு பழநியில் ஆண்டியாக நின்ற முருக னின் கையில் ஒரு வேலைக் கொடுத்தார். அதோடு இந்த வேலை இன்றுமுதல் காப்பாயா க. இந்த வேல் என்றும் உனக்குத் துணையாக இருக்கும் என்று கூறினாராம். அதன்மூலம் தான் வேல்முருகன் என்று அழைக்கப்பட்டார். அதனால் பார்வதி வேல் கொடுத்த திருநாள் தான் தைப்பூசத் திருநாள்.
தைப்பூச விரத முறைகள்
*******************************
நம்முடைய இன்னல்களைத் தீர்க்கும் தைப்பூச விரத தினத்தன்று எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று விரிவாகப் பார்க்கலாம். தைப்பூச விரத தினத்தன்று மனதில் என்ன நினைத்து வேண்டுகிறோமோ அது அப்படியே நிறைவேறும். அதேபோல் இந்த நாளில் முருக னின் பார்வை பட்டுவிட்டால் உங்களுடைய வாழ்க்கையில் ராஜயோகம் உண்டாகும்.
துளசி மாலை
******************
பொதுவாக தீவிர முருக பக்தர்கள் எல்லோரு மே மார்கழி மாதத் தொடக்கத்திலேயே தங்க ளுடைய தைப்பூச விரதத்தைத் தொடங்கிவிடு வார்கள். கழுத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். நாள் முழுக்க திருப்புகழோ, கந்த சஷ்டியோ, சரவண சஷ்டியோ பாடிக் கொண்டிருப்பது நல்லது.
உணவு
**********
மாதக் கணக்கில் விரதம் இருக்க முடியாமல் தைப்பூச நன்னாளில் மட்டும் விரதம் இருப்பவ ர்கள் தான் மிக அதிகம். அப்படி அந்த குறிப் பிட்ட நாளில் மட்டும் விரதம் இருப்பவர்கள் அந்த நாள் முழுக்க வெறும் தண்ணீர் தவிர வேறு எந்தவித உணவையும் சாப்பிட கூடாது. அந்த நாளின் இறுதியில் சூரிய அஸ்தமனத்து க்குப் பின் ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை சொல்லி விரதத்தை முடிக்க வேண்டும்.
காவடி
********
தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் ஆற்றல் தைப்பூச விரதத்துக்கு உண்டு என்று சொல்வார்கள். அப்படி நீண்ட நாட்களாக குண மாகாமல் ஏதேனும் நோயால் அவதிப்படுபவ ராக இருக்கிறவர்கள் முருகளை வேண்டிக் கொண்டு ஏதேனும் ஒரு காவடி எடுத்தால் தீராத நோயும் தீர்ந்து போகும் என்கிறார்கள்.
No comments:
Post a Comment