Monday, January 17, 2022

இவர்களைப் பற்றி சில வரிகள்.

 

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மஹாத்மா காந்தி.
உத்தமர். நல்லவர். ஆனால், தான் நற்பெயர் எடுப்பதற்காக இந்துக்களுக்கு உபத்ரவத்தை ஏற்படுத்தி சென்றவர்.
நேரு.
சொகுசாக வாழ்ந்து இந்தியாவை ஆண்டவர். பல பிரச்சனைகளுக்கு கமா வைத்து விட்டு சென்றவர்.
பட்டேல்.
இரும்பு மனிதர் தான். காந்தியின் கட்டுப்பாட்டுக்கு பயந்து மனதில் இருந்ததை செயல்படுத்த தவறியவர்.
லால்பகதூர் சாஸ்த்ரி.
அளவுக்கு அதிகமாக நேர்மையாக இருந்ததால், துயர் நிலையை போக்க மறந்தவர்.
இந்திரா.
அணிவகுப்பில் காவலாளியால் கொல்லப்பட்டது துயரம்.
தவிர, விசித்திர துணிச்சலை விபரீதமாக காட்டியவர். நல்லவர்களை வளரவிடாமல் விட்டவர்.
சரண்சிங்.
இரைக்கு ஆசைப்பட்டு நேர்மையை விற்றவர்.
மொரார்ஜி.
தேசபக்தர். அறிவாளி. விலை போகாதவர். பிறரை விலைக்கு வாங்க மறுத்ததால் நல்லாட்சியை தொடர ரிஸ்க் எடுக்க தவறியவர்.
ராஜீவ்.
வி.புலிகளால் கொல்லப்பட்டது துயரம்.
தவிர, தவறான ஆலோசனைகளை சாணக்யத்தனம் என்று நினைத்து ஏமாந்தவர். பஞ்சாயத் ராஜ் சட்டத்தை அமல்படுத்தி மாநிலங்களை எகிர வைத்தவர். அதனால் ஊழலை நாடு முழுதும் பரவலாக்கிய பெருமைக்குறிவர்.
சந்திரசேகர்.
நல்லவர். சிந்தனையாளர். மனதைரியமுடையவர். கூட்டம் சேர்க்க முடியாத நல்லக் கொள்கைகளுடையவர்.
நரசிம்மராவ்.
பொருளாதார மந்த நிலையை போக்க, வெளிநாட்டு மதகுகளை திறந்து விட்டு புரட்சி செய்தவர். புண்ணகை பூக்காதவர். ரிசர்வ் வங்கியில் கையெழுத்துப்போட்டுக் கொண்டிருந்த மன்மோகன் சிங்-யை அரசின் நிதிக்கோப்பில் கையழுத்திடவைத்தவர்.
தேவகவுடா.
கஷ்ட்ட காலம்.
குஜரால்.
கஷ்ட்ட காலம்.
மன்மோகன்.
பொம்மையாய் சோனியா பின் சென்றவர். புரட்சி செய்ய முயன்று சோனியாவின் கட்டுப்பாட்டுக்கு பயந்து நடுங்கியவர். நேரு குடும்ப கட்சிக்கு கட்டுப்பட்ட மேனேஜராக இருந்த பெருமைக்குறியவர்.
வாஜ்பாய்.
இந்தியாவுக்கு திருப்பு முனை தந்த முதல் மனிதர்.
இவரது தைரியம் கட்சி தலைமைக்கு கட்டுப்படாதது. மொரார்ஜி விட்டுச் சென்றதை தொடர ஆசைப்பட்டு தோல்வியடைந்தவர்.
அத்வானி.
அனைவராலும் ஜென்ட்ல்மேன் என அழைக்கப்படுபவர். காரணம், பிரதமர் வேட்பாளருக்கான கோதாவில் இறங்க ஆசைப்படாதவர்.
மோடி.
பிரதமருக்கான அடையாளத்தை காட்டியவர். தேசப்பற்று அளப்பரியது. அண்டை நாடுகளையும், வளர்ந்த நாடுகளையும் வியக்க வைத்தவர். வருங்கால இந்தியர்கள் தன்னிறைவு பெறுவதற்காக தற்கால இந்தியர்களை பொருளியலில் சற்று கஷ்ட்டப்படுத்தி வருபவர். தியாகம் தவிர்க்க முடியாது என்பதில் உறுதியாய் இருப்பவர். தீர்க்கவே முடியாது என்றிருந்த பிரச்னைகளை அறிவுப்பூர்வாக தீர்த்தவர். முடங்கிக் கிடந்த ஹிந்துக்களை தலை நிமிர வைத்தவர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...