அப்போது திருநெல்வேலியில்
பெரிய விழா ஒன்று ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
அதில் காமராசரின் 67வது வயதை பறைசாற்றும்விதமாக 67 அடி உயர கொடி கம்பம் நடபட்டு தலைவர் கொடியேற்ற அனுமதியும் வாங்கபட்டது.
காமராசர் அங்கு வருவதற்கு சற்று முன்பாக அந்த கொடி கம்பத்தில் போட பட்டிருந்த சீரியல் லைட் தோரணம் கீழே விழுந்து விட,
விழா ஏற்பாடு செய்தவர்கள் தடபுடலாக மைக் செட்காரரிடம் சொல்ல,
அங்கே மைக் செட்டுகாக வேலை செய்த இளைஞர் தான் திரும்பவும் குறைந்த நேரத்திற்குள்ளாக கட்டுவதாக சொல்லி,
அந்த 67 அடி கொடி கம்பத்தில் ஏறி வேலை செய்யும் போது தலைவர் காமராசரும் வந்து விட்டார்.
நடப்பதை பார்த்து பதறி அந்த இளைஞனை, ''கீழ இறங்குனேன்'' என்றார் .
அவரும் வேலையை முடித்து விட்டு இறங்கியதும் கூட்டத்தை ஏற்பாடு செய்தவரிடம், ''இந்த தம்பிக்கு ஒரு சால்வை போடுன்னேன்'' என்றார்.
தலைவர் சொல்படி சால்லை போட்டதும், அந்த இளஞனின் கண்ணத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார்.
அவ்வளவு தான்.
விழா ஏற்பாடு செய்தவர்கள் தலைதெரிக்க ஓடினார்கள்.
அந்த இளஞனிடம் காமராசர் சொன்ன வார்த்தை,
''அட கிறுக்கு பயல... கிறுக்கு பயல... 67 வயசு ஆன நான் பிறந்த நாள் கொண்டாட உன் உயிர பணயம் செய்து நீ செத்து போனா இந்த நாட்டுக்கும் உன் ஆத்தா அப்பனுக்கும் எவன்டா சோறு போடுவான்? கிறுக்கு பயல...'' என கண்ணீர் மல்க சொன்னார்.
தனக்காக தொண்டர்களை தீக் குளிக்கச் செய்த தலைவர்கள் வாழ்ந்த நம் தமிழ் நாட்டில் தான்....
'சாதாரண மனிதனின் உயிர், மதிப்பானது' - என எடுத்துக் கூறி அவனுக்காகவும்... வாழ்ந்த ஒரு தலைவன் உண்டென்றால், அது #பெருந்தலைவர்
ஒருவர் மட்டும் தான்.
No comments:
Post a Comment