இந்தியா உட்பட, 100க்கும் மேற்பட்ட நாடுகளில், 'ஒமைக்ரான்' வேகமாக பரவி வருகிறது.மத்திய அரசின் சுகாதாரத் துறை,'கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்' என்று, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.டில்லி, கர்நாடகா மாநிலங்களில், இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இவ்விஷயத்தில் மெத்தனமாக இருக்கிறது.கோவை 'கொடீசியா' மைதானத்தில் தி.மு.க.,வின், 'பூத் ஏஜன்ட்' கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் முதல்வரின் மகனும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி பங்கேற்றுள்ளார்.இது கட்சிக் கூட்டமா அல்லது மாநாடா என்பது போல, தி.மு.க.,வினர் ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர்.இதில் பெருமை ஏதும் இல்லை. நோய் பரவல் அதிகரித்து வருகிறது என்ற எண்ணம் கொஞ்சம் கூட, ஆளும் தி.மு.க., அரசுக்கு இல்லை என்பதையே, இந்த கூட்டம் வெளிச்சமிட்டு காட்டிஉள்ளது.
ஆளுங்கட்சியான தி.மு.க.,வே, இப்படி பொறுப்பின்றி செயல்படுவது, கண்டனத்திற்கு உரியது.இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக, மக்கள் பல விதங்களில் துயரப்பட்டனர். வேலை வாய்ப்பு இல்லாமல், பலரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். பெரும் பொருளாதார சரிவை, நாடு சந்தித்தது.மீண்டும் ஊரடங்கு என்பதை, மக்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.அரசியல் தலைவர்களே... உங்கள் கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றால், தயவு செய்து காணொலி காட்சி வழியாக அவர்களை சந்தியுங்கள்.
No comments:
Post a Comment