Saturday, January 1, 2022

சின்னி மூலிகை.

 சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம் .

மூலிகை செடிகள் பற்றிய தகவல்கள் திரட்ட திரட்ட சில செடிகளின் மருத்துவ பயன்கள் அறிந்ததும் ,இந்த செடியா என்று ஆச்சிரியமாக இருக்கிறது.
நம்மை சுற்றி எத்தனை வினோதங்கள் ,நம்முடைய கண் நோக்கும் தூரம் தான் இந்த உலகம் என்று நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே எனக்கு தெரிகிறது.
எந்த ஒரு விசியத்தையும் நாம் காது கொடுத்து கேட்பது கிடையாது.
தெரிந்து கொள்ள முயர்ச்சியும் செய்வதும் இல்லை .
அப்படி நாம் வீட்டில் 'பெருசு 'என்று பட்டம் சூட்டி வீட்டின் மூலையில் அமர வைத்துள்ள பெரியவர்களை மதித்து நாம் நடந்து அவர்கள் சொல்வதை கேட்டு கொண்டால் 70 ,80 வயதில் வரவேண்டிய மூட்டு வலி ,60 க்கு மேல் வரும் முதுமை 30 வயதில் வந்து விட்டதே என கவலை படவேண்டியது இல்லை.
இதை நாங்கள் என் சொல்கிறோம் என்றால் ,பசுமை காப்பாளர்கள் ஒரு மூலிகை செடி பற்றிய தகவல் அறிந்த உடன் ,அது உண்மை தானா என அறிய சிலரை நாடும் பொது அவர்கள் சொல்லும் ஒரே பதில் "நாங்க சொன்ன யார் கேட்கிறார்கள் ,பெருசுக்கு ஒண்ணுமே தெரியாது என சொல்லி எங்களை மட்டுமல்ல மூலிகை செடிகளையும் புறக்கணிக்கிறார்கள் "என்கிறார்கள்.
இன்று நாம் பார்க்கபோகும் சின்னி செடியின் பயன்களை கண்டிப்பாக நமக்கெல்லாம் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம்.
சிலவற்றை பார்த்திருந்தாலும், அதன் பெயர், பயன் தெரியாமலேயே இருப்போம். அதன் பயன்களை தெரிந்தபின் அதுவா இது! என ஆச்சரியத்தில் ஆழ்ந்திடுவோம். அந்த வகையில் சின்னியும் ஒன்று. வண்ண வண்ண பூக்களுடன் வேலிகளில் படர்ந்து கிடக்கும் செடிதான் சின்னி. கொடிபோல் படர்ந்து வளரும் செடியினம். தண்டுகளில் சிறிய முட்கள் நிரம்பியிருக்கும். வெருட்டல் மணம் கொண்டது. இதன் பூக்கள் இளம் சிவப்பு, மஞ்சள், வெள்ளை என பல்வேறு நிறங்களுடன் காட்சியளிக்கும்.
தமிழகம், புதுவையில் சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் செழித்து வளர்ந்திருக்கும். இதன் இலை, கிழங்கு ஆகியவை மருத்துவ பயன் உடையவை ஆகும். இதன் இலைக்கு வண்டு கடி நஞ்சு நீக்குதல், இடுமருந்தை முறித்தல், ஓடுகின்ற வாத நோயை போக்குதல், என்வென்றே தெரியாத கடி நஞ்சை முறித்தல். மேகம் மற்றும் கணக்காய்ச்சல், மந்தம் அனைத்தும் குணமாக்கும் தன்மை கொண்டது. வண்டு கடித்தால் சிலருக்கு அமாவாசை நாட்களில் உடலில் தடுப்பு ஏற்படும்.
அவர்களுக்கு சின்னி இலையை கைப்பிடி அளவு எடுத்து, ஒரு பூண்டு, 10 மிளகு ஆகியவற்றை சேர்த்து மைய அரைத்து மூன்று நாட்கள் தொடர்ந்து காலை மாலை கொடுத்து வந்தால் வண்டுக்கடியால் ஏற்படக்கூடிய உடல் தடிப்பு மற்றும் அரிப்பு முதலியவை நீங்கும். மருந்து உண்ணும் நாட்களில் பத்தியமாக உப்பு, புளி நீக்கவேண்டும். வண்டு கடித்தால் சிலருக்கு அமாவாசை நாட்களில் உடலில் தடுப்பு ஏற்படும். அவர்களுக்கு சின்னி இலையை கைப்பிடி அளவு எடுத்து, ஒரு பூண்டு, 10 மிளகு ஆகியவற்றை சேர்த்து மைய அரைத்து மூன்று நாட்கள் தொடர்ந்து காலை மாலை கொடுத்து வந்தால் வண்டுக்கடியால் ஏற்படக்கூடிய உடல் தடிப்பு மற்றும் அரிப்பு முதலியவை நீங்கும். மருந்து உண்ணும் நாட்களில் பத்தியமாக உப்பு, புளி நீக்கவேண்டும்.
இடு மருந்து என்று சொல்கின்ற வசிய மருந்து உண்டவர்கள் தனது சுய சிந்தனையை இழந்து காணப்படுவார்கள். இவர்களுக்கு சின்னியின் இலையை தட்டி பிழிந்து, அதனுடன் தண்ணீர் கலந்து 50மிலி அளவில் கொடுத்தால் வாந்தி ஏற்படும். அப்போது அதனுடன் வசிய மருந்தும் வந்து விழும். மேலும் அந்த மருந்து செரித்து ரத்தத்தில் கலந்து இருந்தாலும் மூன்று நாட்கள் காலை வேலையில் மட்டும் கொடுத்து வந்தால் நஞ்சு முறிந்து அந்த நபர் மீண்டும் பழைய நிலைக்கு வருவார். சின்னியின் வேரை தோண்டினால் கிழங்கு இருக்கும். பன்றி கறிக்கு நிகரான குளிர்ச்சி மிக்கது. அந்த கிழங்கை எடுத்து ஆவியில் வேகவைத்து மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை நேரத்தில் உண்டு வந்தால் மூலம் தீரும். ரத்தகழிச்சல் போகும்.
மனிதர்களை வாட்டி வதைக்கும் மலசிக்கலை போக்கும் ஆற்றல் சின்னிக்கு உண்டு. சின்னி இலைப்பொடி 5 கிராம், இசப்புகோல் 50 கிராம், நிலாவரை 30 கிராம், கடுக்காய் 15 கிராம் எடுத்து அனைத்தையும் இடித்து சூரணமாக்கி சலித்து இரவு படுக்கைக்கு போகும் முன்பு 2கிராம் அளவில் இளஞ்சூடான நீரில் கலந்து குடித்துவரவேண்டும். இதனால் காலையில் மலம் எளிதாக வெளியேறும். இது ரோஸ்லோ என்ற பெயரில் சித்த மருந்தாக கடைகளில் கிடைக்கிறது. இதை வாங்கி 3 கிராம் அளவில் நாள்தோறும் பயன்படுத்தலாம்.சின்னி இலையை மைய அரைத்து தேள் கொட்டிய இடத்தில் வைத்து கட்டினால் விஷம் இறங்கி குணம் கிடைக்கும். கிராமங்களில் தேள்கடிக்கு மறை பொருளாக இன்றைக்கும் இதை பயன்படுத்தி வருகின்றனர்.
கடிவிடமுங் காணாக் கடிவிடமும் மாதர்
இடுவிடமும் ஓடுமிது வன்னி- நெடியவிழிக்
கன்னிகையே மேகங் கணக்காய்ச்சல் மாந்தமும்போம்
சின்னி யிலைக்குத் தெரித்து’’
சின்னிக் கிழங்கு சிறுசிரங்கு புண்வளர்க்கும்
உன்னிலது ஆர்ப்பன்றிக் கொவ்வுங்காண்-அன்னமே
மூல மறுக்குமது மோதுரத்தஞ் சீர் மாற்றும்
தால மறியுநிசந் தான்.’’
என்கின்றது அகத்தியர் குணவாடகம் நாம் அறிந்த செடியின், நாம் அறியாத பல்வேறு பயன்களை ஆராய்ந்து, அவற்றை மனித வாழ்விற்கு வழங்கியவர்கள் நமது முன்னோர்கள். அவர்கள் வழியில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி வாழ்வில் நலமுடன் வாழ்வோம்.
பசுமை காப்பாளர்கள்
ஆளுக்கு ஒரு மரம் நடுவோம் ,மழை பெறுவோம்.,மகிழ்ச்சியாக வாழ்வோம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...