Saturday, January 1, 2022

உங்கள் மனைவியின் உணர்வை புரிந்துகொண்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள்.

 சிலரின் வீட்டில் மனைவி என்பவள் வீட்டை ஆளும் ராணியாக இருக்கின்றாள்.

ஆனால்...
பலரின் வீட்டில் மனைவி என்பவள் ஒரு இயந்திரம் போலவே இருக்கின்றாள்.
ராணி போல வீட்டை ஆளும் மனைவிக்கு ராஜா போன்ற கணவன் இருப்பதினால் தான் அவனின் மனைவியை ராணி போல வைத்துகொண்டு நன்றாக பார்த்துக் கொள்கின்றான். ராணி போல இருக்கும் மனைவிக்கு எந்த ஒரு கவலையும் எந்த ஒரு மன வேதனையும் இல்லை ஏனெனில் ராஜா போன்ற கணவன் இருப்பதினால்.
ஆனால்...
ஒரு இயந்திரம் போல வீட்டில் அனைத்து வேலைகளையும் ஒருநாள் விடாமலும் ஒரு நொடி பொழுது கூட ஓய்வு எடுக்க விடாமலும் வீட்டில் உள்ளவர்களின் பலரின் சொற்களாலும், பலரின் கொடுமைகளாலும், அதை அனைத்தையும் சகித்துக்கொண்டு தன் கணவருக்காக மாதத்தில் வரும் அந்த மாதவிடாயை கூட மறந்து தேவைப்படும் எல்லா வேலைகளையும் நேரம் பார்க்காமல் செய்கின்றனர் பலரின் வீட்டில் உள்ள மனைவிகள்.
இயந்திரம் போல நடத்தும் கணவன்மார்களுக்கு மனைவியின் உணர்வு ஒருநாளும் புரியாது. அதை புரிந்துகொள்ளவும் முடியாது. ஏனெனில் புரிந்துகொள்ள நினைத்தால் தானே புரியாததையும் புரிந்துகொள்ள முடியும்...?
உங்கள் மனைவியை அரவணைக்காவிட்டாலும் பரவாயில்லை
ஆனால்...
உங்கள் மனைவியின் உணர்வை புரிந்துகொண்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள்
நீங்கள் உங்கள் மனைவிக்கு நல்ல கணவனாக இருக்க ஆசைப்பட்டால் மட்டுமே...
☺️💐
May be an image of 1 person and text that says "AVR வலியில் நான் தவிக்கும் நேரத்தில் அவனின் நெஞ்சில் சாய்த்து எனது தலை கோதி நெற்றியில் அவன் பதிக்கும் அந்த ஒற்றை முத்தமும் அழகாய் சொல்லிடும் காதலின் மொத்தத்தையும்!.."

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...