Tuesday, January 11, 2022

ரஜினி, இளையராஜா, வணங்கும் “மூக்குப்பொடி சாமியார்”

 “ஆனால் இந்த மூக்குப்பொடி சாமியாருக்கு வி.ஐ.பிக்கள் பலர் பக்தர்கள். அவர்கள் எல்லாம் இந்த சாமியாரிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காகவே திருவண்ணாமலை வருவார்கள்.

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா, டிரம்ஸ் சிவமணி ஆகியோர் அவ்வப்போது மூக்குப்பொடி சாமியாரை சந்தித்து ஆசீர்வாதம் பெறுவது உண்டு.
அதெல்லாம் புகைப்படங்களாக, செய்திகளாக வெளியாகவில்லை என்பதால் தெரியவில்லை” ” என்கிறார்கள்.
ஓட்டலில்…
“இவர் பூர்வீகம் என்ன.. எப்போது திருவண்ணாமலை வந்தார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஐம்பது வருடங்களுக்கு முன் எப்படி இருந்தாரோ.. அதே போலத்தான் இப்போதும் இருக்கிறார். இவருக்கு நூற்றைம்பது வயதுக்கு மேல் இருக்கும்.
மந்திரம் சொல்லி பயங்கரமா சத்தம் போட்டபடியே மூக்குப்பொடி போடுவார். ஆகவே மூக்குப்பெடாி சாமியார் என்று அழைக்கப்படுகிறார்.
யாரிடமும் பேச மாட்டார். ஏதாவது குறியீடாக ஓரிரு வார்த்தைகளை உச்சரிப்பதோடு சரி. இவர் குளிப்பதே கிடையாது. அழுக்கடைந்த உடலோடு, கந்தல் உடையில் சுற்றிக்கொண்டிருப்பார்.
திடீரென ஏதாவது ஒரு ஓட்டலுக்குள் நுழைவார். அப்படி இவர் தங்கள் கடைக்கு வந்தால் மிகப்பெரிய அதிருஷ்டம் என்பது இப்பகுதி ஓட்டல்காரர்களின் நம்பிக்கை.
சாமியின் கருணைப்பார்வைக்காக “துரத்தும்” பக்தர்கள்..
ஏதாவது ஒரு ஓட்டலுக்குள் சர்வசாதாரணமாக நுழைந்து, ஒரு சேரை தேர்ந்தெடுத்து கம்பீரமாக ஆக அமர்வார். புதிதாய் பார்ப்பவர்களுக்கு இது ஒரு மாதிரியாக இருக்கும். ஆனால் ஓட்டல் உரிமையாளர் ஓடி வந்து, சாமியாரின் காலில் விழுந்து வணங்கி, “என்ன சாமி வேணும்” என்று பவ்யமாக கேட்பார்கள். வாயில் வந்ததை சாமியார் சொல்ல.. அவர் உத்தரவுக்கு ஏற்ப பூரியோ, பொங்கலோ வேறு ஐயிட்டங்களோ சுடச் சுட வரும். நான்கு வாய் சாப்பிட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விடுவார் மூக்குப்பொடி சாமி.
எங்காவது சுற்றிக்கொண்டே இருக்கும் இவர், மொட்டை வெய்யிலில் மலைப்பகுதியில் கம்பளி போர்வையை போர்த்தியபடி படுத்துக்கிடப்பதும் உண்டு.
காலை வைத்தாலோ கொப்பளித்துவிடும் வெயிலில், பாறையில் படுத்திருப்பார்.. பெரும் கம்பளியை வேறு அணிந்திருப்பார். வெயில் பாதிப்பே இன்றி கண்மடி சுகமாக படுத்திருப்பார்…” என்று ஆச்சரியமாகக் கூறுகிறார்கள் திருவண்ணாமலை வாசிகள்.
கெட்டவார்த்தை சாமியார், அடி சாமியார் என்று வேறு பெயர்களும் இந்த “சித்தருக்கு” உண்டு.
காரணங்கள்தான் வார்த்தைகளிலேயே வெளிப்படுகிறதே!
ஆட்டோவில்..
அதாவது, ஏதோ சிந்தனையில் இந்த சாமியார் எங்காவது செல்ல.. அவரது அருட்பார்வை கிடைக்க வேண்டுமென்று பின்னேலயே பக்தர்கள் செல்வது வழக்கம். அப்போது டென்ஷன் ஆகி ஆபாச வார்த்தைகளால் அர்ச்சிப்பார் சாமியார். கேட்ட பக்தர்கள் புளகாங்கிதமடைவார்கள்.
ஆம்.. அவர் திட்டினால் நல்லது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அதே போல, இவர் அடித்தாலோ, எட்டி உதைத்தாலோ நல்லது நடக்குமாம்.. அதாவது அடி, உதை வாங்கியவருக்கு.
ஒரு முறை டிரம்ஸ் சிவமணி, இந்த சாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்க முயல.. அவரை மிதி மிதியென மிதித்துவிட்டாராம் சாமியார். அதன் பிறகு தனது வாழ்க்கையில் பெரும் நன்மைகள் ஏற்பட்டதாக மகிழ்ச்சியுடன் சொல்வாராம் டிரம்ஸ் சிவமணி.
இந்த மூக்குப்பொடி சாமியாரின் விநோத பழக்கங்களில் ஒன்று, பயணம். அதாவது, திடீரென பக்தர்களில் காரில் ஏறி டிரைவர் சீட் அருகில் உட்காருவார். அவர் கைகாட்டும் திசையில் பயபக்தியுடன் காரை செலுத்துவார்கள். அவர் எங்கே நிறுத்தச் சொல்கிறாரோ நிறுத்துவார்கள். பிறகு பேக் டூ திருவண்ணாமலை. சாமியார், வாய் வார்த்தையே பேச மாட்டார். செய்கையிலேயே பயணம் நிறைவடையும்.
பக்தர் ஒருவர், “மூக்குப்பொடி சாமியின் பயணத்தில் உள்ளர்த்தம் இருக்கும். திருவண்ணாமலையில் இருக்கும் ஓட்டல் ஒன்றின் அதிபர், சாமியாரின் சிஷ்யகோடிகளுள் ஒருவர். ஒருமுறை இப்படித்தான் அவரது காரில் ஏறி வழி சொல்ல ஆரம்பித்துவிட்டார் சாமி. பல மணி நேர பயணத்துக்குப் பிறகு பெங்களூரு அருகே உள்ள நித்தியானந்தாவின் பிடாதி ஆசிரமம் எதிரே காரை நிறுத்தச் சொல்லி சைகை காட்டினார் சாமி. கார் நின்றதும் இறங்கியவர், அங்கு வாசலில் பெரிதாக வைக்கப்பட்டிருந்த நித்தியானந்தாவின் படத்தைப் பார்த்து காறித்துப்பினார். பிறகு ஊருக்குத் திரும்பச் சொல்லி உத்தவிட்டார்.. சைகையில்தான்.
ஒருகோயிலினுள்…
ஊருக்கு வந்து சேர்ந்த மறுநாள், நித்தியானந்தா, பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தின. தொடர்ந்து நித்தியானந்தா மீது வழக்குகள் பாயந்தன. அவர் தலைமறைவாக ஓடியதும் நடந்தது” என்கிறார்கள் இப்பகுதியினர்.
குறிப்பிட்ட ஒருவரது ஆட்டோவில் அவ்வப்போது ஏறி அமர்ந்து பயணிப்பார் மூக்குப்பொடி சாமியார். பயணம் முடந்ததும் ஏதாவது ஒரு கடைக்குள் நுழைந்து கல்லாவில் இருந்து உரிமயாக பணத்தை எடுத்து ஆட்டோ ஓட்டுநருக்கு அளிப்பார்.
இப்பகுதியில் உள்ள கோயில்களுக்குள்ளும் சர்வசாதாரணமாக நுழைவர். அங்கிருக்கும் கடவுள் சிலைகளை விளக்குமாற்றால் அடிப்பதும் உண்டு. ஆனால் இதையெல்லாம் யாரும் தவறாக எடுத்துக்கொள்வதில்லை.
“அவரே சாமி.. அவர் அடிச்சா என்ன” என்கிறார்கள்.
இந்த சாமியாரைப் பார்த்தாலே புண்ணியம் என்கிற நம்பிக்கையோடு திருவண்ணாமலைக்கு படையெடுப்பவர்களில் நடிகர்கள் மட்டுமல்ல.. சில அரசியல்வாதிகளும் உண்டு.
தவிர உயர் அதிகாரிகளும் இந்த பட்டியலில் உண்டு.
ஜனநாயகத்தில் பிரிக்க முடியாதது அரசியலும் சினிமாவும் மட்டுல்ல.. ஆன்மிகமும்தான்!
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...