எந்த ஒரு நாளாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் தலையீடு இல்லாமல் இருக்காது. வானியல் அடிப்படையில் தான் சுப நாட்கள், அசுப நாட்கள் கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில் சூரியனின் நிலை பொருத்தே கரிநாள் கணக்கிடப்படும்.
தெளிவாகக்கூற வேண்டுமென்றால் கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம்” (கதிர்வீச்சு) அதிகமாக இருக்கின்ற நாட்கள் ஆகும். இவை வருடத்திற்கு வருடம் மாறாதவை.
குறிப்பிட்ட தமிழ் மாத தேதிகளில் சூரிய கதிர்வீச்சு பூமிக்கு போதுமானதை விட அதிகமாக வரும். அந்த நாட்களை கரிநாட்கள் என்று கணித்து கூறுகின்றனர்.
இவை கிழமை, திதி, நட்சத்திரம் சார்ந்தது இல்லை. தமிழ் தேதி அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படும்.
ஏன் கரிநாட்களில் சுப காரியங்கள் செய்யக் கூடாது?
கரிநாள் அறிவியல் காரணங்கள் என்ன? நம் முன்னோர்கள் எதையும் காரண காரியம் இல்லாமல் செய்யமாட்டார்கள். பெரும்பாலும் அறிவியல் கலந்த உண்மை அடங்கி இருக்கும்.
கரிநாட்களில் சூரிய கதிர் வீச்சு பூமிக்கு அதிகமாக கிடைக்கும். அவை நம் உடம்பில் உள்ள அனைத்து சுரப்பிகள் மற்றும் ஹார்மோன்களை சராசரியை விட சற்று அதிகமாக தூண்ட வைக்கும்.
எனவே, இந்த நாட்களில் நாம் உணர்ச்சி வசப்படுதல், கோபம், யோசிக்காமல் முடிவெடுத்தல், குழப்பம் போன்றவற்றை செய்ய நேரிடும். எனவே தான் கரி நாட்களில் சுபகாரியங்கள் செய்யவேண்டாம் என்கின்றனர்.
மேலும் அன்றைய தினங்களில் அதிக வெய்யிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். சூரிய கதிர்வீச்சு உடல் உறுப்பை பாதிக்கும். இது வானியல் ரீதியாக கண்டறிந்து கூறியுள்ள உண்மையாகும்.
மொத்தம் வருடத்திற்கு 34 கரிநாட்கள் உள்ளன. இதில் சித்திரை முதல் மாசி வரை உள்ள கரிநாட்கள் உதவா நாட்கள் என்றும்.
பங்குனியில் உள்ள கரிநாட்கள் மிகுந்த தீமை தரும் நாட்கள் என்றும் முதன்மை சோதிட நூலான “சோதிட கிரஹ சிந்தாமணி” என்ற பெரிய நூலில் குறிப்பிட்டுள்ளனர்.
12 மாதம் கரிநாட்கள் பட்டியல்
சித்திரை – 6 மற்றும் 15
வைகாசி – 7, 16 மற்றும் 17
ஆனி – 1 மற்றும் 6
ஆடி – 2, 10 மற்றும் 20
ஆவணி – 2, 9 மற்றும் 28
புரட்டாசி – 16 மற்றும் 29
ஐப்பசி – 6 மற்றும் 20
கார்த்திகை – 1, 10 மற்றும் 17
மார்கழி – 6, 9 மற்றும் 11
தை – 1, 2, 3, 11 மற்றும் 17
மாசி – 15, 16 மற்றும் 17
பங்குனி – 6, 15 மற்றும் 19
ஆகிய இத்தினங்கள் கரிநாட்கள் ஆகும்.
இத்தினங்களில் எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்குவதை தவிர்த்தல் வேண்டும். இவை அனைத்து வருடங்களுக்கும் பொருந்தும்..
தை பொங்கல்
தை மாதம் முதல் மூன்று நாட்களும் தமிழகத்தில் சூரியனுக்குரிய விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் அந்த மூன்று நாட்களும் கரி நாட்களாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கரி நாட்கள் சூரிய சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டதாகக் கருதலாம்.
எனவே கரி நாட்கள் என்பதை வெறும் தமிழ் தேதிகளாக கருதாமல், சூரியனின் சஞ்சார பாகைகளாக எடுத்துக்கொள்ளலாம். கரி நாட்களைப்போன்றதே தனிய நாட்களாகும். இந்த விளக்கங்கள் தனிய நாட்களுக்கும் பொருந்தும். கரி நாட்களில் இனி நல்ல விசயங்களை செய்வதை தவிர்த்து விடுவது அனைவருக்குமே நல்லது.
ஆனால் தெய்வம் சம்பந்தப்பட்ட யாகங்கள், ஹோமங்கள், பூஜைகள் இவைகளையெல்லாம் இந்த தேதிகளில் வைத்துக் கொள்ளலாம் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த நாளில் கடனை அடைக்கலாம்...மீண்டும் கடன் வாங்கும் நிலைமை வராது ..!!
No comments:
Post a Comment