ஏழுமலையான் சிலையில் இருந்து கழட்டப் படும் அணிகலன்கள் எப்போதுமே சூடாகவே இருக்கும்.
இந்தியாவில் மிகவும் பணக்கார கடவுள் என்று மக்கள் அனைவராலும் கூறப்படும் கடவுள் திருப்பதியில் பள்ளி கொண்டிருக் கும் வெங்கடேச பெருமாள். அப்படிப்பட்ட திருப்பதி கோவில் பற்றி நீங்கள் அறிந்தி டாத சில சுவாரசியமான தகவல்கள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமா ளுக்கு உகந்த மாதம். அந்த மாதத்தில் பெரும்பாலா னோர் பெருமாளை தரிசிக்க திருப்பதி செல் வார்கள். திருப்பதி என்றா ல் பெருமாள் மட்டும் தான் சிறப்பு என்றில் லை. அதையும் தாண்டி சில சிறப்பான விஷயங்களும் உள்ளன...
1. பெருமாளுக்கு சார்த்தப்படும் பூ, அபி ஷேகப் பால், நெய், மோர் , தயிர், துளசி இலைகள் இவை எல்லாமே ஒரு கிராமத் திலிருந்து பிரதியேகமாகக் கொண்டு வரப் படுகிறது. அந்த கிராமமே பெருமா ளுக்காக மட்டுமே வேலை பார்க்கிறது. இது திருப்பதியிலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அங்கு இதுவ ரை யாரும் சென்றதில்லை. அனுமதித்ததி ல்லை. கோவில் அர்சகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
2. பெருமாளின் உருவத்தில் பதிக்கப்பட்டி ருக் கும் முடி உண்மையானது என சொல்லப்படுகி றது. அதாவது பெருமாள் பூமிக்கு வந்தபோது நிகழ்ந்த போர்க்களத் தில் அவருடைய முடியி ன் சிலவற்றை இழந்துள்ளார். இதை அறிந்த காந்தர்வ பேரரசி நீலா தேவி இதை கவனித்து விட்டு தன்னுடைய கூந்தலை அறுத்து பெரு மாளின் சிலை முன்பு வைத்துவிட்டு அதை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டியுள் ளார். அதை ஏற்றுக்கொண்டு அவர் தலை யில் சூடிக்கொ ண்டுள்ளார். அதனால் தான் பெருமாளை தரிசிக்கும் ஒவ்வொரு வரும் தங்கள் முடியை தானமாக பெருமா ளுக்கு கொடுப்பதாக சொல்லப்படுகிறது.
3. பலருக்கும் திருப்பதியின் பெருமாள் சிலை சன்னதியின் நடுவில் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் சிலை சன்னதியின் வலது கை மூலையில் அமைந்துள்ளது.
4. பெருமாளின் சிலை பின்புறம் உள்ள சுவற்றில் காதை வைத்துக்கேட்டால் கடல் அலை சத்தம் கேட்பதாகக் கூறப்படுகிறது. எனவே அவர் பார்க்கடலில் இருப்பது போன்ற அமைப்பு கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாக நம்பப்படுகிறது.
5. பெருமாள் வீற்றிருக்கும் கருவறையில் எரி யும் மண் விளக்குகள் ஒரு போதும் அணைத்த தே இல்லை என்று சொல்லப் படுகிறது. அது எப்போது ஏற்றப்பட்டது குறித்த பதிவு இல்லை என்றாலும் ஏற்றப் பட்ட நாள் முதல் இன்று வரை அணைந்த தே இல்லை.
6. 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு அங்கிரு ந்த மன்னன் குற்றம் செய்த தண்டனைக் காக 12 பேரை தூக்கிலிட்டு மரண தண்ட னை விதித்து ள்ளார். பின் அவர்கள் இறந் த பிறகு உடலை திருப்பதி கோவிலின் சுவற்றில் கட்டியுள்ளார். இதனை பொருத் துக்கொள்ள முடியாமல் பெருமாள் நேரடி யாகத் தோன்றி தரிசனம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
7. விக்கிரத்தின் பின்புறம் எப்போதும் ஒருவித ஈரப்பதமும், தண்ணீர் ஊற்றபடி இருக்கும் என சொல்லப்படுகிறது. இது குறித்து பல ஆய்வுக ள் செய்தும் அதன் காரணத்தை அறிய முடிய வில்லை என்கின்றனர்.
8. பெருமாளுக்கு சார்த்தப்பட்ட மலர்களை மறுநாள் காலை சுத்தம் செய்த பின் அவற்றை அர்சகர்கள் கர்பகுடி அல்லது கருவறை கூடை யில் போடுவதில்லை. மாறாக கோவிலின் பின் பக்கத்தில் அமை NBந்துள்ள அருவில் கொ ட்டுகின்றனர். அப்படி கொட்டும் பூக்களை ஒரு போதும் அவர்கள் அங்கு பார்த்ததில்லையாம். அவை அனைத்தும் கோவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் எர்பேடு என்ற கிராமத்திற்கு சென்று தேங்கி நிற்கின்றனவாம்.
9. அதாவது பச்சை கற்பூரம், கற்பூரம் என எந்த வகை கற்பூரமாக இருந்தாலும் அதை ஒரு கல்லில் வைத்து தொடர்ந்து ஏற்றினால் அல்ல து அதன் காற்று பட்டா லே அந்த கல் விரிசில் அல்லது பிளவை உண்டாக்கும் என்பது அறிவி யல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனா ல் திருப்பதி சிலையில் இன்றளவும் எந்த விரி சல், பிளவுகளும் இல்லை என்று கூறப்படுகி றது. அதற்கான எந்த அடையாளங்களுமே இல்லை என்கிறனர்.
10. திருப்பதி ஏழுமலையான் சிலையின் பின் புறமாக எப்போதும் ஈரம் கசிந்து கொண்டே இருக்குமாம். ஏன் என்ற காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப் படவில்லை. ஆனால் கோவிலுக்குள் இருக்கும் பூசாரிகள், அந்த இடத்தினை ஈரமின்றி வைத்திருப்பதையே ஒரு வேளையாக வைத்திருக்கின்றார்கள்..
ஓம் நமோ வேங்கடேசாய....
No comments:
Post a Comment