Monday, January 10, 2022

பெருந்தலைவர் செய்த அனைத்து திட்டங்களும் பெரியாரால் வந்தது என்று மாற்றிவிட்டார்கள்.

 வரலாற்றை மாற்றத்துடிக்கிறார்கள்

கீழடியில் தமிழர் நாகரீகத்தை வெளியுலகுக்குத் தெரியாமல் வஞ்சிக்கிறார்கள் என்றெல்லாம்
பாஜகவை திட்ட திமுகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதை துரைமுருகன் தன் பேச்சின்மூலம் நிரூபிக்கிறார்....
அவருக்கு காமராஜ் சினிமாவை போட்டுக்காட்டுங்கள்
சபாநாயகர் சார்!
வாழ்ந்த தெய்வத்தின்
வரலாற்றுச் செய்தியை
துளி கூட லஜ்ஜையே இல்லாமல் மாற்றிச் சொல்கிறாரே...
அண்ணன் துரைமுருகனுக்கு
என்ன ஆச்சு...
பாவம்....
2019 தேர்தல் சமயத்தில்
கத்தை கத்தையாக பலநூறு கோடிகள் பணம் அவருடைய கல்லூரியிலும்
அவரின் மகனுக்காக தேர்தல் வேலை பார்த்தஅவருக்கு வேண்டப்பட்ட நண்பர்களின்
வீடு அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தி
மத்திய அரசு கைப்பற்றி அப்போது நடக்க இருந்த தேர்தலை ஒத்தி வைத்ததிலிருந்து அண்ணன் துரைமுருகன் ஒரு மாதிரியாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்...
வரலாறை மறந்துவிட்டாரா?
அல்லது செலக்டிவ் அம்னீஸியாவா?
அடிக்கடி மருத்துவமனைக்குப் போவதால் வந்த சைட் எபெக்டா? என்று தெரியவில்லை.
ஒருகாலத்தில்
க.சுப்பு ரகுமான்கான் துரைமுருகன் என்ற மூவரின் பேச்சையும் கேட்க வெறிபிடித்து அலைந்த கூட்டத்தில் நானும் ஒருவன்...
கட்சிக்கு அப்பாற்பட்டு நல்ல பொழிவு என்றால் போய்க் கேட்க எப்போதும் தயங்கியதில்லை நான்.
க.சுப்பு இறந்துவிட்டார்
இரகுமான்கான் இறந்துவிட்டார்.
இவர் மட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறார்.
நன்றாக இருக்கட்டும் நூறாண்டு வாழட்டும்...
நூறாண்டு என்று எழுதும்போது எனக்கு எழுத்தாளர் தமிழ்வாணன் நினைவுக்கு வருகிறார்
நூறாண்டு காலம் வாழ்வது எப்படி? என்று
அருமையான
புத்தகத்தை தமிழ்கூறும் நல்லுலகுக்கு கொடுத்த மறு வருடம்
தன் ஐம்பத்தி இரண்டாவது வயதில் அவர் இறந்து போய்விட்டார்...
நம் வார்த்தை சித்தர் வலம்புரிஜான் கூட அப்படித்தான்
வானியம்பாடி மருத்துவர்களுக்கு வாழ்க்கை கொடு்ப்பதாக வாக்கு கொடுத்ததற்காக
காசினிக் கீரைக்கு மார்க்கெட்டிங் செய்தவர் தினம் தினம் சன் டிவியில் தோன்றி இந்தநாள் இனிய நாள் என்றும்
தினம் ஒரு கீரை சாப்பிட்டால் நூறு வருடம் வாழலாம் என்றும்
ஊருக்கே வைத்தியம் சொன்னவர்
சொந்த குடும்பத்தினரின் ஆதரவு கூட கிடைக்காமல்
அநியாயமாக மரித்துப்போனார்...
சரி இப்போது அந்தக்கதைகள் வேண்டாம்.
அண்ணன் துரைமுருகன்
அவர் மகன் பெயர் மறந்துவிட்டது இப்போது அவர் வேலூர் எம்பி
இருவருமே காமராஜ் தொண்டர்கள் காங்கிரஸ்காரர்கள்
ஓட்டு இல்லாவிட்டால்
தெருவில்தான்
நின்றிருப்பார்கள்
இவர் காட்பாடியில் சற்றேரக்குறைய
தோற்றேவிட்டார் என்று எல்லோரும் நினைத்தபோது
வெறும் எழுநூத்தி சொச்சம் ஓட்டில் தப்பித்தார்....
"தலை தப்பியது காங்கிரஸ்காரன் புண்ணியம்"என்று வெளிப்படையாகவே அன்று சொன்னதும் இதே வாய்தான்.....
இவர் மகன் வேலூர் எம்பிக்கு நின்ற போது....
ஜெயலலிதா கருணாநிதி இருந்த காலத்திலேயே சுயேச்சையாக ராணிப்பேட்டை தொகுதியில் நின்று எம்எல்ஏ வாக வெற்றிபெற்ற
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் அண்ணன் வாலாஜா உசேன் வேலூர் எம்பி தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவை
என் மகன் தோற்றுவிடுவான்
உசேனை எப்படியாவது வாபஸ் வாங்கச் செய்யுங்கள் ப்ளீஸ் என்று அழாத குறையாக துரைமுருகன் கெஞ்சியதால்....
தநாகாக தலைவர் அண்ணன் அழகிரி
நேரில் சென்று அன்பாய்ப் பேசி நிலைமையைச் சொல்லி வற்புறுத்தியதால்
அவரும் அண்ணனின் வேண்டுகோளை ஏற்று ஒரு உண்மையான காங்கிரஸ்காரராக வாபஸ் வாங்கியதால்
பெற்ற ஓட்டுக்களால்தான்
ஏழாயிரத்து சொச்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் எம்பியாக ஜெய்த்தார் இவர் மகன்....
காங்கிரஸ் இல்லாவிட்டால் பாராளுமன்றத்தை மகனும் சட்டமன்றத்தை இவரும் கனவில்தான் பார்த்துக்கொண்டு கண்ணீரோடு காலம் தள்ளியிருப்பார்கள்...
இது...நிலைமை இப்படியிருக்கும்போது
இவர் ஒரு புதுக்கதையை
சட்டமன்றத்தில் சொல்கிறார்
முதலமைச்சர்களாக
காமராஜரும் பக்தவத்சலமும் வாகனத்தில் போகும்போது சைரன் வச்ச வண்டி வருமாம்
கலைஞர் முதல்வராக இருந்தபோது சாவுக்குத்தான்
சங்கு ஊதனும் இப்ப வேண்டாம் என்று சொல்லி நிறுத்திவிட்டாராம்
என்று செம ரகளையாக புதுக்கதை சொல்லியிருக்கிறார்.
காங்கிரஸால் அடையாளம்
காட்டப்பட்டு
அரசியலுக்கு வந்த மாண்புமிகு சபாநாயகர் அப்பாவு வாத்தியாரும் இதை "தேமே" ன்னு கேட்டுக்கொண்டு பாவம் சுமக்கிறார்.
அட அப்போது அவையிலிருந்த கை சின்னத்தில் ஜெய்த்த ஆளுங்கட்சி எம்எல்ஏக்களில் சொரனை உள்ள ஒரு மனிதராவது
ஒரு சின்ன எதிர்ப்பை கூட காட்டவேண்டாம்
அவைக்கு அமைச்சர் தவறான தகவலைத் தருகிறார் என்று குறிப்பாலாவது உணர்த்தினார்களா? என்றால்
இல்லை இல்லவே இல்லை என்கிறார் அப்போது அவை மாடத்திலிருந்த பத்திரிக்கையாளர்...
அண்ணன்
துரை முருகனை நீர் மேலாண்மை அமைச்சர் என்பதற்கு பதில்
பழையபடியும் பொதுப்பணித்துறை அமைச்சர் என்றே அழைக்கப்படுவார் என்று
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துவிட்டால் அண்ணனுக்கு
எல்லாம் சரியாகிவிடும்!
இல்லாவிட்டால் இப்படித்தான் தெனாலி படத்து கமலஹாசன் போல ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்
அதுவரை இப்படி எல்லாவற்றையும் அனுபவிக்கவேண்டியது தமிழனின் தலையெழுத்து!

தமிழக முதல்வராக இருந்த பெருந்தலைவர் #காமராஜர் தான் தன் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த #சைரனை நீக்கச்சொன்னவர்..புரிந்ததா
அப்ப பேசு..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...