*1) நீட் தேர்வுக்கான அரசாணை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ; அரசாணை எண் என்ன ?*
_21.12.2010 ; MCI -31(1)/2010-MED/49068_
*2) 2010 இல் மத்திய அரசு யார் ?*
காங்கிரஸ் + திமுக
*3) நீட் அரசாணை வெளியிட்ட MCI எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது.*
சுகாதார துறை அமைச்சர்
*4) மத்திய சுகாதார துறை அமைச்சர்/இணை அமைச்சர் யார் ?*
குலாம் நபி ஆஜாத் - காங்கிரஸ்
காந்தி செல்வன் - திமுக
*5) ஆனால் 2011 இலிருந்து 2016 வரை நீட் அமலுக்கு வரவில்லையே.*
அமலுக்கு வராததற்கு காரணம் உச்ச நீதிமன்றம் கொடுத்த இடைக்கால தடையும், 2013இல் நீட் அரசாணையை செல்லாது என்று அறிவித்ததும்.
*6) பின் ஏன் 2017 இல் நீட் தேர்வு நடத்தப்பட்டது.*
2013இல் உச்ச நீதிமன்றத்தால் நீட் அரசாணை ரத்து செய்யப்பட்டது . திமுக ஆதரவோடு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு போட்டது. அந்த தீர்ப்பு 2016 இல் வந்தது. உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு மூலம் தான் அணைத்து மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கையும் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 2016 இல் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வின் மூலம் மட்டுமே சேர்க்கை நடத்தப்பட்டது. அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு 2017 இல் இருந்து நீட் அமலானது.
*8) NEET தேர்வால் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் (அரசு கல்லூரிகள்) வேறு மாநிலத்தவர் சேர முடியுமா ?*
இல்லை. தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 85% இடங்கள் தமிழக மாணவர்கள்/தமிழகதில் உள்ள பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே சேர முடியும். நீட் தேர்வு தான் அகில இந்திய தேர்வு. ஆனால், மெரிட் லிஸ்ட் மாநில வாரியாக தான் . 15% சீட்கள் அகில இந்திய ஒதுக்கீடு. நீட்க்கு முன்பும் இதே நிலை தான் ; நீட் அமல்படுத்த பட்ட பின்பும் அதே நிலை தான் .
*9. தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீடு தொடருமா ?*
69% இட ஒதுக்கீடு தொடரும் .
*10. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்தலாமா? அது மாநில உரிமையில் தலையிடுவது ஆகாதா ?*
இந்திய அரசியலமைப்பில் உள்ள ஏழாவது அட்டவணையில் உள்ள மத்திய பட்டியலில் உள்ள 66 Entry "Co-ordination and determination of standards in institutions for higher education or research and scientific and technical institutions."
No comments:
Post a Comment