மழை பெய்வதை சாபக்கேடு போல எந்த செய்தி தொலைக்காட்சியை பார்த்தாலும் ஏதோ நடக்கக்கூடாது நடந்துடு இருக்குறது போலவும் தமிழ்நாடே அழிய போகிறது போலவும் தேவையற்ற பதற்றத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.*
இவை நாம் இயற்கையிடமிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது.
சென்னை போன்ற பெரு நகரத்தில் எப்படிப்பட்ட நீர் பற்றாகுறை நிலவுகிறது என்பதை யார் சொல்லியும் நமக்கு தெரியவேண்டியதில்லை. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து சின்னாமின்னாமாக ஆக்கிவிட்டோம். சிமெண்ட் சாலை, வீடுகள் அமைத்து பெய்யும் மழை நீர் நிலத்தடிக்கு போகாமல் தடுத்துவிட்டோம்
நீர்நிலை ஆக்கிரமிப்பு, நீர்வழிதடங்களை மூடி வீடுகள், சாலைகள் கட்டுவது, இராட்சாச குழாய்களால் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுப்பது, ஆறுகளில் கழிவு நீரை கலந்து ஆற்றையே சாக்கடை ஆக்கியது இப்படி எல்லா தவறுகளையும் நாம் செய்து விட்டு மழை பெய்வதை பேரழிவாக அடையாளப்படுத்துவது என்ன நியாயம் இருக்கிறது? மழையே பெய்யாமல் இருப்பதை தான் நாம் விரும்புகிறோமா?
ஒருநாள் சாலைகளில் தண்ணீர் நின்று விட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டது போலவும் நீர் நிலைகள் நிரம்புவதையே அபாயமாகவும் மிகைப்படுத்துவது நியாயமன்று.
இம்மழை பெய்யாவிட்டால் நாம் குடிநீருக்கும் அன்றாட தேவைக்கும் யாரை நாடுவது? மழை தவிர.
நாம் செய்த எல்லா தவறுகளையும் சரி செய்வதற்கும் அதை உணர்த்துவதற்கும்தான் இம்மாமழை என்பதை உணர்ந்துகொள்வோம்
மழை செழுமையின் அடையாளம்..
நீர்நிலை நிரம்புவது வளத்தின் அறிகுறி..!
வாருங்கள் மழையோடு உறவாடுவோம்..
மழையை கொண்டாடுவோம்..!
No comments:
Post a Comment