நீ ஏன் இப்படி நடந்துக்கிறன்னு எனக்கு தெரியும்.
என்ன தெரியும்????
நீ ஏன் இப்படி நடந்துக்கிறன்னு.
சரி. ஏன் இப்படி நடந்துக்கிறேன்???
ஏன்னா நீ ஒரு சங்கி.
என்னப்பா உன்னை சங்கின்னு சொல்லி கலாய்ச்சி இருக்கேன், நீ சாதாரணமா டேங்க்ஸ்னு சொல்லிட்டு போனா எப்படி????
வேற என்ன செய்யனும்னு எதிர்பார்த்தேன்????
உனக்கு கோபம் வரவில்லையா???
என்ன பத்தி பெருமையா சொன்னதுக்கு நான் ஏன் கோபப்பட வேண்டும்???
என்னது உன்னை பத்தி பெருமையா சொன்னேனா????
ஆமாம். பெருமையாக தான் சொல்லியிருக்க.
எப்படிப்பா????
நீ என்ன சொன்ன????
உன்னை சங்கின்னு சொன்னேன்.
அதுக்கு நான் ஏன் கோபப்பட வேண்டும். என்னை பெருமையா தானே சொல்லியிருக்க????
அதெப்படி????
முதலில் சங்கம் என்பதற்கு அர்த்தம் தெரியுமா????
என்னபா, எங்க வாத்தியார் மாதிரியே கேள்வி எல்லாம் கேக்குற??? அவர் கேள்வி கேக்குறாருன்னு தானே நான் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டேன்.
இல்லைன்னா அப்படியே படிச்சு கலெக்டர் ஆகியிருப்பியா???? சரி அப்படி என்ன படிப்பு படிச்சே???
ரெண்டாம்பு வரைக்கும் படிச்சேன். அதையெல்லாம் எதுக்கு இப்போ தோண்டி துருவி கேட்டுக்கிட்டு????
சரி உன் வீணாப்போன கதைய விடு. சங்கம் என்றால் புலவர்கள் குழு என்று அர்த்தம்.
அப்படியா??? இது எனக்கு தெரியாதேப்பா.
உனக்கு என்ன தான் தெரியும்???? இதை ஒன்று போல் அமைந்த கூட்டமைப்பு என்றும் கூட சொல்வார்கள். இதைத் தான் ஆங்கிலத்தில் சங்கம் என்று சொல்வது வழக்கம்.
ஓஹோ.
அதனால்தான் தொழிலாளர்களின் கூட்டமைப்பு தொழிற்சங்கங்கள் என்றும், ஆசிரியர்களின் கூட்டமைப்பு ஆசிரியர் சங்கம் என்றும், மருத்துவர்களின் கூட்டமைப்பு மருத்துவ சங்கம் என்றும்.
ஆமாம்பா. ஒவ்வொரு சாதி கூட்டமைப்பும் கூட சாதி சங்கங்கள் என்று அழைக்கப்படுகிறதே????
அதை மட்டும் நல்லா தெரிந்தது வச்சிருக்க. சரியான அரசியல் வியாதி தான் நீ.
அரசியலில் இதெல்லாம் அவசியமப்பா.
போகட்டும். இது போன்ற சங்கங்களின் உறுப்பினர்களாக இருப்பவர்களை எப்படி கூப்பிடுவ???
பேர் சொல்லித்தான்.
ரொம்ப புத்திசாலி தனமா பதில் சொல்றதா நெனப்பா???? சங்க உறுப்பினர்களை பொதுவா சங்கி என்று தான் அழைப்பது வழக்கம்.
இது எனக்கு தெரியாதேப்பா.
உனக்கு என்ன தான் முழுசா தெரிஞ்சிருக்கு, இது தெரிய????
சரி. மேல் சொல்லுப்பா.
இராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் என்று அழைக்கப்படும் RSS அமைப்பும் இன்ன பிற கிளை அமைப்புகளையும் ஒருங்கே சங்பரிவார் என்று வட இந்தியர்கள் அழைக்க துவங்கினார்கள்.
இதன் உறுப்பினர்கள் சங்கிகள் என்று அழைக்கப்பட்டனர்.
அப்படியா????
இதுமட்டுமின்றி நமது மண் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்.
பெரியார் மண்ணுன்னு சொல்றாங்களேப்பா????
அந்த ஈர வெங்காயம் வெறும் களிமண்ணு. அதை எதுக்கு இப்ப நியாபகப் படுத்திக்கிட்டு????
ஆமாம், ஆமாம் நீ மேல சொல்லுப்பா.
அப்படி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண் இது. அப்ப அந்த முதல், இடை, கடை சங்கங்களை சேர்ந்த புலவர்களை எப்படி கூப்பிடுவே????
சங்கின்னு தான்.
இதையெல்லாத்தையும் விட முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு.
அதென்னப்பா????
முதல் சங்கத்தின் தலைவரா இருந்தது யாருன்னு தெரியுமா உனக்கு?????
எனக்கு எப்படிப்பா தெரியும்????
முதல் சங்கத்தின் தலைவரா இருந்தது அந்த முருக பெருமானே தான். அவரு தான் நம்ம எல்லாருக்கும் மூத்த சங்கி. எல்லோரையும் விட பெரிய சங்கி.
அடேங்கப்பா. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா????
ஆமாம். இப்ப சொல்லு சங்கி என்பது இழிவான சொல்லா????
இல்லவே இல்லை.
அப்படி நீ கூப்பிட்டதுக்கு நான் கோபப்பட்டிருக்கனுமா????
கூடவே கூடாது. எனக்கு ஒரு சந்தேகம்பா.
என்ன சந்தேகம்???
நானும் ஒரு associationல மெம்பர். அப்ப நானும் சங்கியா????
அது என்ன association??? அதனால் யாருக்காவது எந்த நன்மையாவது இருக்கா????
என்னப்பா இப்படி கேட்டுப்புட்ட. நம்ம associationன நம்பித்தான் இந்த அரசாங்கமே இருக்கு.
அப்படி அதென்ன சங்கம்???
டாஸ்மாக் விற்பனையை ஆதாரப்போர் சங்கம் தான்.
அதான பார்த்தேன் குடிகார நாயே. அப்படியே ஓடிப்போய்டு. டாஸ்மாக் சங்கம், ஓசியில் சோறு உண்போர் சங்கம், உண்டியல் பிச்சைக்காரர்கள் சங்கம், என்று சொல்லி கொண்டு எவனாவது நாங்களும் சங்கி தான் என்று சொந்தம் கொண்டாட வந்தீங்க, செருப்பு பிஞ்சிடும். ஜாக்கிரதை.
No comments:
Post a Comment