Wednesday, January 11, 2023

அதிமுக பொதுக்குழு வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு .

 அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் 5வது நாளாக விசாரணை நடைபெற்றது. இதில் இரட்டை தலைமை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினர். அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்? என்று கேள்வி எழுப்பினர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனரா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் கட்சியின் விதிப்படி நடைபெற்றது. ஒபிஎஸ் தனக்குத்தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என கூறுவது உண்மை அல்ல. ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டாரே தவிர, 1.5 கோடி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கிய பொதுக்குழுவே, அவற்றை ரத்து செய்துள்ளது என்று அதிமுக கட்சி சார்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய பொதுக்குழுவே அவற்றை நீக்க முடியும் என்ற வாதம் தவறு. கட்சியின் உட்கட்சி பதவிகளுக்கான தேர்தலை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே அறிவித்தனர் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது. 2017-ம் ஆண்டில் அசாதாரண சூழலின்போது பொதுக்குழு கூடி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அவை தலைவருக்கு அதிகாரம் இல்லை என்பதை மறந்துவிட்டனர். ஜூலை 1ம் தேதி அளிக்கப்பட்டது நோடீஸ் அல்ல என வாதிடப்பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். ஜனவரி 16-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...