Wednesday, January 11, 2023

இந்த ஒரு பொருளை வீட்டிற்குள் கொண்டு வந்தால் வாசலில் நிற்கும் உங்கள் வீட்டு குலதெய்வம், வீட்டிற்குள் வந்துவிடும். குலதெய்வ கட்டு உடையும்.

 குடும்பத்தில் தொடர்ந்து நல்ல காரியங்கள் நடந்து கொண்டே வரும். உயிர்போகக் கூடிய பிரச்சனை வந்தாலும் அதிலிருந்து நம்மை காக்க ஏதோ ஒரு தெய்வ சக்தி நம்முடன் இருப்பதாக உணர்வோம். நம்ம கூட யாருமே இருக்க மாட்டாங்க. ஆனா ஒரு சப்போர்ட் இருப்பதாக உணர்வோம். திடீரென்று ஒரு நாள் வீட்டிற்குள் வாழும் குலதெய்வம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஏதோ ஒரு காரணத்தில் நம் வீட்டை விட்டு வெளியேறக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். எந்த ஒரு சப்போர்ட்டும் நம் குடும்பத்திற்கு இருக்காது. திடீரென்று தனி மரம் ஆகிவிட்டது போல தோன்றும். வரக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் வீட்டில் இருப்பவர்களை புரட்டிப் போடும். திடீர் இழப்புகள் ஏற்படும். என்ன என்று தெரியாமல் திணறுவோம். படாத பாடு எல்லாம் பட்டு, ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டால் உங்கள் குலதெய்வத்தை யாரோ கட்டி விட்டார்கள் என்று சொல்லுவார்கள். தெய்வத்தையே கட்ட முடியுமா என்ன? தெய்வத்தை யாராலும் கட்டி போட முடியாது. குலதெய்வ கட்டு விழுந்துவிட்டது என்றால், குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்கவில்லை என்பதுதான் அர்த்தம். உங்களுடனே, உங்கள் வீட்டில் தங்கி, உங்கள் பக்கத்தில் இருந்து உங்கள் கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு தந்த குலதெய்வம், இப்போது பக்கத்தில் இல்லாமல் தூரமாக நின்று கொண்டிருக்கிறது என்பதுதான் குலதெய்வ கட்டு என்று சொல்லுவார்கள். நம் அருகில் இருந்த குலதெய்வம் நம்மை விட்டு தூர விலகி செல்ல என்ன காரணம். நம்மை சூழ்ந்து இருக்கும் கெட்ட சக்தி தான் காரணம்.  கெட்ட சக்தியிடம் போராடி குலதெய்வம் நம்மை காப்பாற்ற வேண்டாமா. குலதெய்வம் ஏன் தள்ளி நிற்கிறது. என்ற சந்தேகம் நம்மில் எல்லோர் மனதிலும் வரும். ஆனால், இந்த கெட்ட சக்தியை ஏவி விடுபவர்கள் குலதெய்வத்தை வீட்டிற்குள் வர விடாதபடி, உங்களை நெருங்க விடாதபடி சில தந்திர வேலைகளை செய்து விடுவார்கள். இதனால் தான் குலதெய்வம் நம் குடும்பத்திற்கு எந்த நல்லதையும் செய்ய முடியாமல், நம் குடும்பத்தை காக்க முடியாமல் ஒதுங்கி நிற்கும் என்று சொல்லுவார்கள். சரி இதற்கு உண்டான தீர்வு தான் என்ன. இந்த குலதெய்வ கட்டை உடைப்பதற்கு எளிமையான முறையில் ஏதேனும் பரிகாரம் உண்டா. நிச்சயம் இருக்கிறது. அதை பற்றி தான் இப்போது பார்க்கப் போகின்றோம். குலதெய்வ கட்டு உடைய வீட்டிற்குள் வைக்க வேண்டிய பொருட்கள்: மிக மிக எளிமையான முறையில் இந்த பொருட்களை வீட்டிற்குள் கொண்டு வந்து விட்டால், வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி வெளியே சென்று விடும். வெளியே நிற்கும் குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வந்துவிடும். மஞ்சள் தண்ணீர், வேப்ப இலை, மயில் இறகு இந்த மூன்று பொருட்கள் தான் நமக்கு தேவை. ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலிலோ அல்லது ஜாடியிலோ சுத்தமான தண்ணீரை ஊற்றி, அதில் மஞ்சள் பொடி போட்டு விடுங்கள். இந்த தண்ணீரில் மயிலிறகு 3, வேப்பங்கொத்து 3, போட்டு அப்படியே வரவேற்பு அறையில் வைத்து விட வேண்டும்.  இந்த பொருட்கள் வீட்டிற்குள் வந்து விட்டால் உங்கள் வீட்டில் இருக்கும் துர்சக்திகளும் கெட்ட சக்திகளும் வீட்டில் தங்க முடியாமல் வெளியே சென்று விடும். நிலை வாசலில் நின்று கொண்டிருக்கும் தெய்வம் நிச்சயம் உங்கள் வீட்டிற்குள் வரும். குலதெய்வத்தை நினைத்து மட்டும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். குடும்ப கஷ்டத்திற்கு ஏதாவது ஒரு வகையில் தீர்வு கிடைக்கும்.  உள்ளே இருக்கும் மஞ்சள் தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும். பழைய மஞ்சள் தண்ணீரை வீட்டிற்கு வெளியே ஊற்றி விடுங்கள். வேப்ப இலையை காய்ந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம். மயிலிறகு அதே இருக்கலாம் மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டிற்குள் தெய்வ சக்தியை தங்க வைப்பதற்கு ஆன்மீகம் சார்ந்த மிக மிக எளிமையான பரிகாரம் இது. நம்பிக்கை இருப்பவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...