Monday, January 9, 2023

காய்ச்சல் வந்தால்...

 நன்றாக இருக்கும் ஒருவருக்கு தலைவலி, கால்வலி என ஒருமணி நேரத்தில் காய்ச்சல் வந்துவிடுகிறது. காய்ச்சல் வந்த முதல் நாள் அல்லது இரண்டாம் நாள் என ஏதாவது ஒருநாளில் மட்டும் உண்ணாநோன்பு மிக முக்கியம்... காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு தண்ணீர் என எதுவும் சாப்பிட கூடாது. தாகம் அதிகமானால் சிறிது தண்ணீர் குடிக்கலாம். ஒய்வுடன் பட்டினியை கடைபிடித்தால் காய்ச்சல் தீவிர நிலைக்கு போகாமல் சமாளிக்கலாம். 12 மணி நேர பட்டினிக்கு பிறகு சூடான சோறு அல்லது புளிக்காத மாவு இட்லி தொட்டுகொள்வதற்கு புதினா கொத்தமல்லி கலந்த சட்டினி மட்டுமே. முதல் இரண்டு நாளில் பட்டினி வைத்தியம் பலன் தரும். மூன்றாவது நாளில் பட்டினி வைத்தியம் பலன் தராது.. பப்பாளி இலை சாறு 20 எம்.எல். தேன் கலந்து காலை இரவு என மூன்று நாட்கள் சாப்பிடலாம்... முதல் மூன்று நாட்கள் ஓய்வும் (செல்போன், டீவி கூடாது), பத்திய உணவும் அவசியம்... (ரசம் சோறு கஞ்சி இட்லி) மூன்று நாட்கள் கழித்து காய்ச்சல் சளியாக மாறிவிடும். சளி இருக்கும் சமயத்தில் கற்பூரவள்ளி இலை 4, துளசி இலை 10, வெற்றிலை 1 இது மூன்றையும் கசக்கி போட்டு ஒரு டம்ளர் நீரை அரை டம்ளராக சுண்ட காய்ச்சி காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து இரண்டு நாட்கள் சாப்பிடவும்... இந்த மூலிகை கசாயம் சாப்பிட்ட 5 மணி நேரம் கழித்து சளி அனைத்தும் மலமாக வெளியேறும். காய்ச்சல், சளி என 5 நாளில் இவை சரியானவுடன் நெத்திலி மீன் குழம்பு, ஆட்டுகால் சூப், ஈரல் என சாப்பிட்டு உடலை பலபடுத்தவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...