Monday, January 9, 2023

பட்டுகோட்டையில் ஒரு புரட்சியாளர்....!?

 நான் ஒரு தனிபட்ட வேளையாக பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் வரை சென்றிருந்தேன். வேளை முடிய கொஞ்சம் தாமதம் ஆனதால் மதிய உணவிற்காக பட்டுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தேன், எனது நோக்கம் ஏதோ ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு எனது வீடிருக்கும் பண்ணவயலுக்கு செல்லுவது தான்.

நான் பட்டுக்கோட்டையின் கரிகாடு வரும்போது தான் அந்த பெயர் பலகையை கவனித்தேன், "ஆனந்த் மெஸ் (சைவம்)" உண்மையிலேயே எனக்கு பசி அதிகமாகவே இருந்தது, சரி மெஸ் தானே வீட்டு சாப்பாடு கிடைக்குமே என்று நானும் எனது Car'ஐ நிறுத்திவிட்டு சாப்பிட சென்றேன். சைவம் தான் சாம்பார், வத்தல் குழம்பு, ரசம் மற்றும் மோர் இவற்றுடன் கூட்டு, பொரியல், அப்பளம் , ஊருகாய் உடன் சுத்தமான சைவ உணவு! நன்றாகவே இருந்தது அப்படியே வீட்டு சாப்பாடு சாப்பிட்ட திருப்த்தி எனக்கு!
நான் சாப்பிடும் போது ஒன்றை கவணித்தேன்! அங்கு பல முதியவர்கள், பிச்சைகாரர்கள் மெஸின் வாசல்படி வந்தவுடனேயே அங்கு சாப்பாடு பரிமாறிகொண்டிருந்த முதியவர் ஓடி சென்று வந்தவர்களுக்கு பார்சல் செய்து வைத்திருந்த உணவை கொடுத்துவிட்டு வந்தார் இது ஒருமுறை இல்லை சுமார் பத்து தடவைக்கும் மேலாக ஒவ்வொருவருக்கும் கொடுத்துகொண்டே இருந்தார்.
நான் மற்றும் ஒருசிலர் உள்ளே சாப்பிட்டு கொண்டிருக்கையிலும் அன்புடனே அதை சாப்பிடுங்கள் இதை சாப்பிடுங்கள் என்று விழுந்து விழுந்து அந்த முதியவர் சாபிடுவோரை கவணித்தது பாராட்டுக்குறியது. உப்பு மற்றும் சோடா கலக்காத பொண்ணி அரிசி சாதம் "Unlimited Meals" நானும் ருசித்து சாப்பிட்டேன்.
சாப்பிட்டுவிட்டு பணம் கொடுத்த போது தான் கவணித்தேன் Unlimited full meals" க்கு வெறும் ரூ.50 மட்டுமே எடுத்துகொண்டார். எனக்கு ஆச்சிரியம் அவரிடமே கேட்டேன் ஐயா எப்படி இது உங்களுக்கு கட்டுபடியாகும்? இத்துனை சுவையான உணவை 50 ரூபாய்க்கு கொடுத்தால் நட்டம் வருமே என்று கேட்டேன்!?
அவர் சொன்னார்.....! தம்பி நான் வியாபார நோக்கத்தில் இந்த மெஸ்ஸை நடத்தவில்லை பசியுடன் வருபவருக்கு நல்ல உணவை கொடுப்பதே எனது நோக்கம், காசு இல்லாமல் வரும் எளியவர்களுக்கு (பிச்சைகாரர்கள்) சும்மாவே உணவு கொடுப்பது எனது ஆத்ம திருப்த்தி என்று என்னை ஆச்சிரியபட வைத்தார் அந்த முதியவர் "ஐய்யா.தெய்வசகாயம்"
அந்த முதியவரை பாராட்ட வார்த்தை இல்லாமல் கையெடுத்து கும்பிட்டுவிட்டு வந்தேன். அந்த மெஸ் பட்டுக்கோட்டை to அதிராம்பட்டிணம் ரோட்டில் கரிகாடு பிரியா மருத்துவமனைக்கு எதிர்புரம் உள்ளது. நீங்கள் சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை அந்த முதியவரை பாராட்டவாது அங்கு ஒருமுறை சென்று வாருங்கள்.
அந்த முதியவர் தெய்வசகாயம் என் கண்ணிற்கு தெய்வமாகவே காட்சியளித்தார்.
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...