Tuesday, January 3, 2023

மிக அருமை.இது நிச்சயம் நடக்கும்.

 எனது வீதியில் 100 குடும்பங்கள் வசிக்கின்றன.. அதில் 10 குடும்பம் ஆங்கிலமும், 10 குடும்பங்கள் உருதும், 80 குடும்பங்கள் தமிழையும் தாய் மொழியாக அறிந்தவர்கள்.

அண்ணன் தம்பிகள் போல ஒன்றாக வசித்து வந்தோம். வீதியை கட்டுக்கோப்பாய் வைத்திருக்க ஒரு தலைவரை தேர்ந்து எடுக்க முடிவு செய்தோம்..
குடும்பத்திற்கு ஒரு ஓட்டு...
இருவர் போட்டியிட்டனர்..
வாக்கு கேக்க இருவரும் அனைத்து வீடுகளிலும் சென்று தன் வாக்குறுதியை சொல்லி வீதியின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் என எந்த பாகுபாடும் இன்றி அனைவரிடமும் சரி சமமாக ஆதரவு கேட்டார்..
தேர்தல் நடந்தது...
100 வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் ஒருவர் 70 வாக்குகள் பெற்றார்..(வாக்களித்த குடும்ப விபரம் கீழே கொடுக்கப் படும்)
அதிக ஓட்டு பெற்று வெற்றி பெற்றவர் தலைவராக அறிவிக்க பட்டார்.
இரண்டு மாதம் கழித்து தமிழ் மக்கள் சார்பாக திருவிழா ஒன்று நடத்தினர்.. தலைவருக்கு அழைப்பு விடப்பட்டது. உருது ஆங்கிலம் அறிந்தோர் கலந்து கொண்டனர். ஆனால் தலைவர் மட்டும் வரவில்லை.. "தலைவருக்கு வேறு ஏதாவது முக்கிய வேலையாக இருக்கும் அதனால் வரவில்லை என நாங்கள் எண்ணினோம்..
அடுத்த சில வாரம் கழித்து ஆங்கில மொழி அறிந்தோர் ஒரு விழா எடுத்தனர்..
எங்களுக்கும் , தலைவருக்கும் அழைப்பு.. கேக் மற்றும் பரிசு பொருளுடன் தலைவர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.. நாங்களும் மகிழ்ந்தோம்..
அடுத்த ஒரு சில நாட்களில் தமிழ் மொழி அறிந்தோருக்கு மீண்டும் ஒரு விழா. மீண்டும் தலைவருக்கு அழைப்பு..
ஆனால் மீண்டும் தலைவர் வரவில்லை . அது மட்டுமல்ல ஆங்கிலம் அறிந்தோர் கூட வரவில்லை.. சரி இந்த முறை தலைவருக்கு உடல் நலனில் ஏதாவது பதிப்பு என்று நாங்கள் எண்ணினோம்..
அடுத்த நாள் உருது மொழி அறிந்தோர் விழா..
தலைவர் மிக உற்சாகத்தோடு கலந்து கொண்டு அனைவருக்கும் அசைவ பிரியாணி உணவளித்து கொண்டாடினார். நாங்களும் ஒன்றாக உண்டு மகிழ்ந்தோம் ..
இருந்தாலும்
எங்களுக்கு சிறு மன வருத்தம்..
நேற்று எங்கள் விழாவிற்கு தலைவர் வரமுடியாமல் போனதால்..
சரி நிச்சயம் அடுத்த விழாவிற்கு வந்தே தீருவார் என எண்ணினோம்..
மூன்று மாதங்கள் ஓடின ..
தமிழ் மொழியினர் விழா..
தலைவருக்கு அழைப்பு..
வழக்கம் போல தலைவர் விழாவை புறக்கணித்தார்..
இந்த முறை ஆங்கில மொழி மக்கள் மட்டும் அல்ல உருது மொழி பேசுவோரும் வரவில்லை..
எனக்கு மிகுந்த கோபம்..
அடுத்த நாள் தலைவரை பார்த்து நான் கேட்டேன்.. " வாக்கு கேட்கும் போது அனைவரிடமும் சென்று வாக்கு கேட்டீர்கள்.. ஆனால் இப்போது தமிழ் மொழி விழாவை மட்டும் புறக்கணிப்பு செய்கிறீர்கள். உங்களால் ஆங்கிலம் உருது மொழியினர் கூட விழாவிற்கு வரவில்லை. என்ன காரணம் என்று கேட்டேன்..
தலைவர் சொன்னார்
" அது என் தனிப்பட்ட விருப்பம் " என்று..
பிறகு தான் புரிந்து கொண்டேன் எங்களை பிளவு படுத்தவே இவர் தலைவராக உள்ளார்..
இவரை விரட்ட தமிழ் மொழி தெரிந்தோரை ஒன்று படுத்த வேண்டும். பின் எண்ணிக்கையில் குறைவாக உள்ள மற்ற இரு மொழியுனரும் பழைய படி நம்முடன் ஒற்றுமையாய் இருப்பார்கள் என்று.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...