பொம்மை பதவி என்றார்கள்...
ஆட்டு தாடி என்றார்கள்...
ஆளுநர் பதவி அதிகாரமற்ற பதவி என்றால் அவர் எதையும் பேசிவிட்டு போகட்டும் என்று விட வேண்டியது தானே, எதற்கு இவ்வளவு கூச்சல், கதறல்.
டிஎன். சேஷன் என்ற ஒருவர் தேர்தல் ஆணைய தலைவராக வந்த பின் தான் தேர்தல் ஆணையத்தின் வானளாவிய அதிகாரங்கள் மக்களுக்கு தெரிய வந்தது.
அதுபோல ஆளுநர் ரவியின் வெளிநடப்பு ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை மக்களுக்கு உணர செய்யும்.
அவர்களை பொறுத்த வரை ஆளுநர் வெளிநடப்பு அவர்கள் நாடகத்தின் முடிவு.
ஆனால் ஆளுநரின் ஆட்டம் இனிதான் ஆரம்பமாகும்.அவர் சென்ற தோரணை தெரியவில்லையா? சிங்கம் ஒன்று சீறி பாய்ந்தது போல அப்படி ஒரு ஆக்ரோஷம்.
அவர்களால் தீர்மானம் போட்டு அவர் பேச்சுக்களை அவை குறிப்பிலிருந்து நீக்க மட்டுமே முடியும்.
ஆனால் ஆளுநர் நினைத்தால் அவர்களை வீட்டுக்கு அனுப்ப முடியும். ஆனால் என்னை பொறுத்த வரை இவர்களை வீட்டிற்கு அனுப்பவது நல்ல தண்டனையாக இருக்க முடியாது.ஆனால் நிச்சயம் ஒரு மிகப்பெரிய எதிர்வினை இல்லாமல் இராது.
தீவிரவாதம், ஊழல், ஆளும் திறமையின்மை , சட்டம் ஒழுங்கு சீரழிவு போன்றவற்றை காரணம் காட்டு ஆட்சி கலைப்பு செய்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.அதை இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் ஒரு போதும் செய்யவும் மாட்டார்கள்.
தமிழகம் மற்ற மாநிலங்களில் இருந்து மாறுபட்டது. ஆட்சி கலைப்பு செய்து பாஜக ஆட்சிக்கு வருவது பெரிய விஷயம் அல்ல. ஏனெனில் இங்கே பிரச்னைக்குரியவர்கள் கட்சிகள் அல்ல, மக்கள்.
தமிழக மக்கள் ஒரு மாதிரியானவர்கள். சினிமா நடிப்பையே நம்பி ஆட்சி அதிகாரத்தை கொடுக்கும் எமோஷனல் பீப்பிள்.
ஒரு வேளை ஆட்சி கலைப்பு என்று இறங்கினால் அது திமுகவின் மேல் மக்களிடையே ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி விடும்.
தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று என்னதான் மக்கள் கோபத்தில் இருந்தாலும் மீதம் உள்ள காலத்தில் நிறைவேற்ற இருந்தோம் என்று நீலிகண்ணீர் வடித்து விடுவார்கள் விடியலாளர்கள்.
தமிழக மக்களும் நம்பி மீண்டும் ஏமாறவே செய்வார்கள்.
மேலும் தமிழக மக்களுக்கும் இப்போதும் கூட பாஜகவின் மேல் பெரிய அளவில் நல்ல எண்ணம் இல்லை. இந்த கூட்டம் ஏற்படுத்தி வைத்திருக்கும் போலி பிம்பம் அது.
இப்போது தான் அதை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மாற்றம் நடந்து கொண்டு வருகிறது. பாஜகவிற்கும் அண்ணாமலைக்கும் ஆதரவு பெருகி கொண்டு வருகிறது.
இப்போதே அவசரப்பட்டு குறுக்கு வழியில் முயற்சி செய்தால் உள்ளதும் கெட்டு விடும். வெண்ணை திரண்டு வரும்போது பானை உடைந்தது போல ஆகிவிடும்.
அவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது தற்காலிக தண்டனை அல்ல, நிரந்தர தண்டனை, தண்டனை என்பதை விட முடிவு என்பது சரியாக இருக்கும்.அந்த முடிவு மீண்டும் எழ முடியாத அளவிற்கு இருக்க வேண்டும், அதிமுக போல.
எனவே அவர்கள் ஆளட்டும், முடியும் வரை ஆளட்டும்...
சிக்கி திணறி திண்டாடி வீழட்டும்...
திராவிட மாயை மொத்தமாக மாளட்டும்....
No comments:
Post a Comment