150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம்.
ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு ஒவ்வொரு மாணவர்களும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர்.
அப்போது ஒரு மாணவன் கூறினான்
நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”. சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார்.
அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை கூறினான் அந்த சிறுவன். அதை கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை.
அந்த தாய் கேட்டார் “ நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்”.
அந்த சிறுவன் கூறினான் “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை, அதனால் தான் அப்படி கூறினேன்”.
இதை கேட்ட தாய் வீட்டினுள் சென்று ஒரு மகாபாரத படத்தை எடுத்து வந்தார்.
அதை மகனிடம் காட்டி “ நீ குதிரை வண்டிக்காரனாக வேண்டும் என்று சொன்னது தவறில்லை, ஆனால் நீ எப்படிப்பட்ட குதிரை வண்டி ஓட்டுபவனாக இருக்க வேண்டும் தெரியுமா – மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினானே கிருஷ்ணன், அந்த கிருஷ்ண் போன்ற தேர் ஓட்டியாக இருக்க வேண்டும்” என்றார்.
அந்த சிறுவன் தான்,
தற்போது உலகெங்கிலும் உள்ள
ஶ்ரீ இராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தர்.
160 வது பிறந்தநாள்.
No comments:
Post a Comment