ஆளுநர் உரை
இப்ப எல்லோரும் ஆளுநர் உரை திமுக அரசு அனுப்பி அதை அவர் திருத்தி வாசித்த மாதிரிப் பேசுகிறார்கள்.
அந்த உரை இவர்கள் தயாரித்து முதலில் அலுவலகத்திற்குத்தான் அனுப்புவார்கள் அது நேரடியாக ஆளுநருக்கு செல்லாது. அவர் உதவியாளர்கள் அந்த உரையில் இந்திய இறையாண்மைக்கு ஒவ்வாத கருத்துகள், அரசமைப்புச் சட்டத்திற்கு உட்படாத கருத்துகள் இருந்தால் அதை நீக்க தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பி இருப்பார்கள். நம் அரசில் எந்த ஒரு கடிதமும் எண் இடப்பட்டுதான் மேலே யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு அனுப்புவார்கள். அந்தக் கடிதம் முடிவு எடுக்கப்படும் வரை முடிவறாததாகக் கருதப் படும். அரசுக்குத் திருப்பி அனுப்பி இருந்தால் அல்லது திருத்தங்களுக்கு அனுப்பும் கடிதமும் எண் போட்டே அனுப்பப் படும்.
இந்த அலுவலக பதிவேட்டைப் பார்த்தாலே இவர்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும்.
ஆளுநர் பதவி அரசமைப்புச் சட்ட பதவி. அதில் ஆளுநர் எடுக்கும் முடிவு அவருடைய சட்ட ஆலோசர்களைக் கலக்காமல் எடுக்க முடியாது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஆளூநர் பேசிய உடனே முதல்வர் எழுந்து தீர்மானம் நிறைவேற்ற எழுதி கொடுத்த காகிதத்தை வைத்து கொண்டு பேசியது கவனிக்க வேண்டியவை முன் கூட்டியே திட்டமிட்டு ஆளூநரை அவமானப்படுத்த பேசியதும் கன்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது திட்டமிட்ட செயல்.
No comments:
Post a Comment