பழைய தன் காவல்துறை பணி போல கையை நீட்டி விடுவாரோ..? என்று பயந்து கொண்டு தான் கடைசி வரைக்கு நகம் கடித்துக் கொண்டே இன்று சென்னையில் கமலாயத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை கவனித்துக் கொண்டு இருந்தேன்.
புதிய தலைமுறை பத்திரிக்கையாளர் முருகேசனை வெளுத்து வாங்கி விட்டார். புதிய தலைமுறை உடனே நடந்த வாக்குவாதத்தை தன் சேனலில் கொண்டு வந்து விட்டனர். திரும்பத் திரும்ப காட்டினார்கள்.
யூ டியூப் சேனல் பத்திரிக்கையாளர் என்று சொல்லிக் கொண்டு சில சல்லிப்பயல்கள் கேள்வி கேட்க அதற்கு தனியாக அர்ச்சனை வழங்கினார் அண்ணாமலை.
டைம்ஸ் ஆப் இண்டியா அவர் பங்குக்கு உங்கள் வாட்சில் உளவுக்கருவி இருக்கிறதா? என்று கேட்க அவரிடம் தன் கடிகாரத்தை கழட்டி கொடுக்க அந்த நபர் டூ ஸ்டெப்ஸ் பேக்.
எவனும் தமிழகம் தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தோ, கனிமொழி கூட்டத்தில் பெண் காவல்துறை அதிகாரியை சில்மிஷம் செய்த நபர்கள் பற்றியோ கேட்கவே இல்லை. அதற்கு தனியாக வச்சு வெளுத்து வாங்கினார்.
நம்பியார் எம்ஜியார் படம் பார்ப்பது போலவே இருந்தது.
பத்திரிக்கையாளர்களை, ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் தமிழக அரசின் டிஐபிஆர் பற்றி பேசி உள்ளார். நான் நீண்ட நாட்களாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து இருந்த தகவல் இது.
தேர்தல் நெருங்க நெருங்க இன்னமும் வேடிக்கை அதிகமாக நடக்கும் என்றே நம்புகின்றேன். (கீழே இணைப்பு உள்ளது)
#Annamalai_Press_Meet Jan 4/2023
அநாகரிகவாதிகளுக்கு என் மௌனம் தான் என்ற அண்ணாமலைஜியின் பதில்… பர பர வாக்குவாதமாக மாறியது.
மொத்தத்தில் புத்தாண்டு சரவெடி.
இனிமேல் எப்பவுமே இப்படித்தான்.
பத்திரிக்கை சுதந்தரம் என்ற பெயரில் அத்துமீறல் நடக்கிறது ! ஆளுந்தரப்புக்கு அனுசரணையாக இருந்து கொண்டு, அண்ணாமலையை எப்படி வேணா சிறுமைப் படுத்தலாம்னு நினைக்கிறாங்க ! அவர் இதுக் கெல்லாம் மசிபவராகத் தெரியவில்லை. அவர்கள் பாணியில் திருப்பி அடித்தால் லாரியில் அடிபட்ட .........போல காள் காள் எனக் கூக்குரல். பாய்காட் என்றவர்கள் இன்னும் ஏன் அவர் பின்னே அலைகிறார்கள் ? போங்களேன் ! சுடாலினோ இளையபட்டமோ பேட்டி/ பேசும் போது இப்படி குறுக்கும் மறுக்கும் கேள்வி கேட்பீங்களா ?
கேள்வி கேட்டா உருப்படியா திரும்பிப் போவீர்களா ? எந்த நிபந்தனையுமின்றி இந்த வே... ஊடகத்தை கூப்பிட்டுப் பேசினால் சில்லரை த் தனத்தில் ஈடுபடுகிறார்கள். அதைக் கையாள அண்ணாமலை அசருவதில்லை.நல்ல அரசியல்வாதி !
No comments:
Post a Comment