Thursday, January 12, 2023

மூளையினுடைய செயல்திறனை அதிகரிக்க உதவும் வழிமுறைகள்...

 Ways to help increase the efficiency of the Brain ...

நமது உடலில் அனைத்து உறுப்புகளை விட சக்தி வாய்ந்த உறுப்பு மூளை. நமது வெற்றி தோல்விகளை தீர்மானிப்பதில் அதிக பங்கு மூளைக்கு உள்ளது. அத்தைகைய உறுப்பான மூளையை பாதுகாக்கவும், அதனுடைய செயல்திறனை மேம்படுத்தவும் சிறந்த வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்...
நாம் எப்போதும் தன்னம்பிக்கையுடன்
இருப்பது மிகவும் முக்கியம். நாம் தன்னம்பிக்கையுடன் செயல்படும் போது நமது மூளையில் டோப்போமையின் என்கிற இரசாயனம் சுரக்கிறது. இது மூளையை சுறுசுறுப்பாக வைப்பதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய கவனிக்கும் திறனையும் அதிகரிக்கிறது.
உங்களுடைய மூளை உங்களுடைய உடல் எடையில் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே. ஆனால் உங்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகளில் 20 சதவிகிதத்தை மூளை எடுத்துக்கொள்கிறது. ஆகவே சத்தான உணவுகளை உண்பதை பழக்கமாக்கிகொள்ளுங்கள்.
அதிக நேரம் டீவி பார்ப்பது மற்றும் செல்போன் உபயோகிப்பது உங்களுடைய மூளையுடைய செயல்பாட்டை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே டீவி மற்றும் செல்போன் உபயோகிக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ளுங்கள். உங்களது நேரத்தை பயனுள்ள வழியில் செயல்படுத்த துவங்குங்கள்.
செஸ், கிராஸ்வேர்டு, சுடோகு போன்ற விளையாட்டுகள் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.
உடலுக்கு உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அதேபோல மூளைக்கு புத்தகங்கள் வாசிப்பது சிறந்த பயிற்சியாகும். மூளை எப்போதும் புத்துணர்வுடன் வைக்க உதவுகிறது.
உற்பயிற்சி செய்வது இதயத்துடிப்பை
அதிகரிக்க உதவுகிறது. இதயதுடிப்பு அதிகரிக்கும் போது மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மூளையில் புதிய செல்கள் உருவாகின்றன. மூளையை எப்போதும் புத்துணர்வுடன் வைக்க உதவுகிறது.
எந்த மொழியாயினும் அதில் புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்ளுங்கள். அது மூளையின் செல்களை தூண்டுவதற்கு தூண்டுகோளாக அமைகிறது.
" ஒவ்வொரு நாளும் நீங்கள் அதிக நேரம் செலவழிக்க கூடிய உங்களின் 5 நண்பர்களுடைய சராசரி தான் நீங்கள் ".
என்கிறது ஒரு அமெரிக்க பழமொழி. ஆகவே சிறந்த நட்பு வட்டாரத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
உங்களுடய ஆழ்ந்த உறக்கம் மூளையினுடைய செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. படைப்பாற்றல் மற்றும் கவனிக்கும் தன்மையை அதிகரிக்க ஆழ்ந்த உறக்கம் மிகவும் அவசியம்.
படம் வரைந்து பழகுவதை பழக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இது உங்களுடைய மூளையினுடைய வலது பக்க செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. படைப்பாற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது.
காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. இது மூளையினுடைய செயல்திறனை தூண்ட மிக இன்றியமையாதது.
புதிய மொழியை கற்றுக்கொள்வதினால் மூளையினுடைய செயல்திறன் கூடுகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. புதிய விடயங்களை தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வத்தை தூண்டுவது மூளைக்கு அதிக பங்கு உள்ளது.
இந்த நாள் இனிய நாளாக மலர வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...