Thursday, January 12, 2023

சிலை வைப்பது நல்லது அல்ல.இறந்தவர்களுக்கும் ஆகாது,இருப்பவர்களுக்கும் ஆகாது.

 சில மாதங்களாக இறந்த மனைவி அல்லது அம்மா போல் சிலை செய்து வீட்டில் வைத்து கொள்வது ட்ரெண்ட் ஆகிறது.

என்னை பொறுத்தவரை இது வேண்டாம் என்பேன், காரணம் பிறப்பு இறப்பு எல்லாம் இயற்கை தான்.
கடவுளே உடல் எடுத்து அவதாரம் எடுத்தாலும் உடலை நீங்க வேண்டும் அது தான் நியதி.
கஷ்டமாக இருந்தாலும் ஏற்று கொள்ள வேண்டும்,அடுத்த வேலையை பார்க்க வேண்டும்.
உங்களை நம்பி தான் குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள்,அதனால் இதை கடந்து செல்ல வேண்டும்.
சிலை வைத்தால் மனசு ஏற்று கொள்ள மறுக்கும் வேதனை இருந்து கொண்டே இருக்கும்.
மூளை அவர் இறந்துவிட்டார் என்று சொல்லும் மனசு இதை நம்ப மறுக்கும்,இது உங்களுக்குள் போராட்டத்தை உருவாக்கும்.உங்களால் செயல் பட முடியாது.
நீங்கள் கேட்கலாம் அப்போ போட்டோ மட்டும் வைக்கலாமா என்று,நாம் போட்டோவில் மாலை போட்டு தான் வைக்கிறோம்.
இது அவர் இறந்துவிட்டார் என்று தான் நியாபக படுத்தும்.அதனால் பிரச்சனை இல்லை.
அதனால் வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏
(இந்த பதிவு சித்தர்கள்,மகான்கள்,இறைவன்க்கு பொருந்தாது காரணம் அவர்கள் நம்மோடு இருக்கிறார்கள் என்று நினைத்தால் நமக்கு நம்பிக்கை வரும்,மகிழ்ச்சி தரும் )

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...