சமீபத்தில் பாண்டிச்சேரி சென்றபோது, கடற்கரை செல்லும் வழியில் விடுதி ஒன்றில் தங்கினேன். பக்கத்தில் சாலை ஓரத்தில் பழங்கள் விற்றுக்கொண்டு இருந்தார் இந்த அம்மா.
வெள்ளைக்கார பெண்மணி ஒருவரிடம் சர்வ சாதாரணமாக ஆங்கிலத்தில் பேசி வியாபாரம் செய்தார் இவர். கொஞ்ச நேரம் நின்று கவனித்தேன்.
அடுத்து இன்னொரு வெள்ளை பெண்மணி வர.. அவரிடம் நமக்கு புரியாத மொழியில் பேசி வியாபாரம் செய்தார்.
நான் ஆச்சரியத்தை வெளிப்படுத்த… அவரோ, “அட, இது என்னப்பா பெரிய விசயம்.. இங்க இங்கிலீஸ், ஃப்ரென்ச் மட்டும் தெரிஞ்ச வெளிநாட்டு ஆளுங்க நிறைய பேரு இருக்காங்க. அவங்களுக்கு புரியற மொழியில பேசினாத்தானே ஈஸியா வியாபாரம் பண்ண முடியும்.. . அதான் பழக்கத்திலேயே கத்துக்கிட்டேன்” என்று அசால்ட்டாக சொல்லிச் சிரித்தார்!
அந்தம்மா இருமொழி கற்றுக்கொண்டது மட்டும் விசயமல்ல.. அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம் இருக்கிறது!
உங்கள் தன்னம்பிக்கைக்கும், திறமைக்கும்
வாழ்த்துகள்
அம்மா!
No comments:
Post a Comment