இறந்து பல மணி நேரம் தனிமையில் கிடக்கும் அளவுக்கு அவ்வளவு பிரபலமான வாணி ஜெயராம் தனியாகவா வாழ்ந்தார் என்ற ஒரு கேள்வி ஓடுகிறது..
வாரிசுகளுடன் இருக்க நேரிடும் போது, ஏதாவது ஒரு கட்டத்தில் தன்மானம் தலை தூக்கலாம். இப்படி மானங்கெட்டு இவர்களுடன் சேர்ந்து வாழ்வதை விட தனியாக இருப்பதே மேல் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு அதன்படி நடக்கலாம்.
வாரிசுகள் அருகில் இல்லாத நிலையில், வாரிசுகளே இல்லாத நிலையில் எந்த ஒருவரும் தனது பாதுகாப்புக்காக யாரையாவது ஒருவர் அருகில் வைத்துக் கொள்ளத்தான் விரும்புவார்.
பிரபலங்களும் ஆரம்ப கட்டத்தில் அப்படிப்பட்ட மனநிலையில் தான் இருப்பார்கள். தூரத்து உறவுகளில் யாரையாவது தேர்ந்தெடுத்து அருகில் வைத்து கொஞ்ச காலம் பார்த்திருப்பார்கள்.
அது உறவுகள் மத்தியிலே சொத்து பிரச்சனையில் கொண்டு போய் விடலாம்.
சொந்த பந்தங்களே வேண்டாம் என்று வேறு யாரையாவது நம்பினால் அவர்களும் பொருள் மீதுதான் குறியாக இருப்பார்களே தவிர விசுவாசத்துடன் இருந்திருக்க மாட்டார்கள்.
இதன் பிறகுதான் உதவி என்கிற பேரில் உபத்திரமே வேண்டாம் என்று முடிவுக்கு வந்து தனியாகவே பழகி விடுவார்கள்.
ஆனால் நல்ல மனம் கொண்ட பலர் இருந்தும் யாரையுமே கிட்டே சேர்க்காமல் ஆரம்பம் முதலே பேய் லெவலில் தனியாக வாழ்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.
எம்ஜிஆரின் அன்பே வா படத்தில் நாகேஷ் பேசிய வசனம் தான் நினைவுக்கு வருகிறது..
உலகத்தில் மனுஷன் நொண்டியாக கூட இருக்கலாம். ஆனால் ஒண்டியாக இருக்கவே கூடாது.
No comments:
Post a Comment