எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாலட்சுமி சில இடங்களில் வசிக்க மறுக்கிறாள். அது போலவே சில மனிதர்களிடம் உழைப்பு இருந்தாலும், திறமை இருந்தாலும் அவர்களால் சம்பாதிக்க முடியாமல் போகிறது. அவர்களிடம் பணம் தங்காமல் இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? அவர்கள் செய்யும் தவறு என்ன? உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காதவர்கள் செய்ய வேண்டியது என்ன? எந்த 10 பேரிடம் காசு தங்குவது இல்லை? என்பது போன்ற ஆன்மீக குறிப்பு தகவல்களை தான் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Saturday, April 15, 2023
**இந்த 10 பேரிடம் என்னதான் உழைத்தாலும் காசு சேரவே சேராதாம் தெரியுமா? மகாலட்சுமி ஏன் இவர்களிடம் தங்குவதில்லை?**
1.
பணத்தை கணக்கில்லாமல் செலவு செய்பவர்களிடம் ஒரு கட்டத்தில் பணம் தங்காமல் போய்விடும். பணத்தை செலவு செய்பவர்கள் அதை கணக்கு வைத்து செலவு செய்ய வேண்டும். எதற்காக? எவ்வளவு பணத்தை செலவிடுகிறோம்? என்பதை குறித்து வைத்து செலவு செய்பவர்களிடம் எப்பொழுதும் மகாலட்சுமி நீக்கமற நிறைந்து இருப்பாள். கண்ணா பின்னாவென்று கண்டபடி செலவு செய்பவர்களிடம் இன்று பணம் இருந்தாலும் என்றும் மகாலட்சுமி நிரந்தரமாக இவர்களிடத்தில் தங்குவது இல்லை.
2.
பணத்தை உங்களிடமிருந்து இன்னொருவருக்கு நீங்கள் கொடுக்கும் பொழுது வலது கையால் கொடுக்க வேண்டும். இடது கையால் நீங்கள் தெரியாமல் கூட கொடுக்கக் கூடாது என்கிறது சாஸ்திரங்கள். இந்த தவறை செய்பவர்களிடத்தில் மகாலட்சுமி தங்குவது இல்லை. அந்த நிமிடத்தில் இருந்து உங்களுக்கு பண பிரச்சினை ஆரம்பிக்கும் என்று எச்சரிக்கிறது ஆன்மீகம்.
3.
அடுத்தவர்களுடைய வாழ்க்கையை கண்டு பொறாமைப் படுபவர்களிடத்தில் மகாலட்சுமி தங்குவதில்லை. பிறர் நன்றாக வாழ்ந்தால் அதை கண்டு மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர, இவர்கள் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்கலாம்? நம்மால் இப்படி இருக்க முடியவில்லை என்று ஆதங்கம் கூட கொள்ளக்கூடாது. இப்படி செய்பவர்களிடமும் மகாலட்சுமி ஆனவள் நிரந்தரமாக தங்குவது இல்லை.
4.
செய்த நன்றியை மறந்தவர்களிடத்தில் மகாலட்சுமி ஆனவள் கோபப்படுகின்றாள். ஒருவர் ஒரு காலத்தில் நமக்கு பல்வேறு உதவிகளை செய்து இருப்பார்கள். பணம், நகை கொடுத்து எல்லாம் உதவி புரிந்தவர்களை மறந்துவிட்டு நன்றி கெட்டு அலைபவர்களிடத்தில் மகாலட்சுமி இருப்பதில்லை.
5.
பணம் காசை வைத்து விளையாட கூடாது. சிலர் காசு அதிகம் இருக்கிறது என்கிற மிதப்பில் அதை தூக்கிப் போட்டு விளையாடுவது, தூக்கி எறிந்து விடுவது, கீழே போட்டு மிதிப்பது, நாணயங்களை வைத்து விளையாடிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களை செய்பவர்களிடமும் மகாலட்சுமி தங்குவது இல்லை.
6.
காலை 6 மணி மற்றும் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றி வழிபடுபவர்கள் இடத்தில் மகாலட்சுமி எப்பொழுதுமே இருப்பாள். இந்த இரு வேளைகளிலும் விளக்கு ஏற்றாமல் இருக்கும் இல்லங்களிலும் அடிக்கடி பண பிரச்சினை வரும்.
7.
அதீத கோப குணம் கொண்டவர்கள், பிறர் மீது வீண் பழி சுமத்துபவர்கள், புறம் பேசுபவர்கள் இடத்தில் மகாலட்சுமி தங்குவது கிடையாது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் மகாலட்சுமி எப்பொழுதும் இருக்கின்றாள்.
8.
அடிக்கடி தேவையில்லாமல் கடன் வாங்குபவர்கள் சிலர் இருப்பார்கள். நம்முடைய தேவைக்கு நாம் சம்பாதித்து செலவு செய்ய வேண்டுமே தவிர, கடனை வாங்கி செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆடம்பரத்துக்காக கடன் வாங்குபவர்கள் இடத்தில் கடைசிவரை லட்சுமி தங்குவதில்லை. இதனால் அவர்கள் அடுத்தடுத்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
9.
வாசல் படி என்பது குலதெய்வம் வசிக்கும் ஒரு இடம் ஆகும். இந்த இடத்தில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும். இங்கு அமர்ந்து கதை பேசுவது அல்லது தலை வாருவது போன்ற செயல்களை செய்பவர்கள் இடத்தில் பணம் தங்குவதில்லை.
10.
அளவிற்கு அதிகமாக ஆசைப்படுபவர்கள், சோம்பேறித்தனத்துடன் இருப்பவர்கள், இரவு நேரங்களில் துணி துவைப்பவர்கள், அதிக நேரம் தூங்குபவர்கள் போன்ற சோம்பேறிகளிடம் மூதேவி குடி கொள்வாள் என்பது ஐதீகம், இதனால் மஹாலக்ஷ்மி தங்குவதற்கு அங்கு வாய்ப்பில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
No comments:
Post a Comment