Wednesday, April 12, 2023

ஜெயலலிதா தனிப்பட்ட வாழ்க்கையில் நிம்மதியே இல்லை. அவங்க சாதிக்கவில்லையா???

 கே.பி.சுந்தராம்பாள், பிரபல பாடகர் கிட்டப்பாவிற்கு, இரண்டாம் மனைவியாக வாழ்க்கைப்பட்டார். இவர்களுடைய மணவாழ்வு ஏறக்குறைய நாலரை ஆண்டுகளே நீடித்தது. குழந்தை பாக்கியமும் இல்லை. கிட்டப்பாவும், சுந்தராம்பாளைப் பிரிந்து, முதல்மனைவியுடன் வாழ்ந்தார். 1933ஆம் ஆண்டில், மிதமிஞ்சிய குடிப்பழக்கத்தால், உடல்நிலை பாதிக்கப்பட்டு, கிட்டப்பா இறந்தபோது, அவர் வயது 28; சுந்தராம்பாள் வயது 26. அத்தோடு, சுந்தராம்பாள், அறுசுவை உணவுகளை விடுத்து பத்திய உணவுண்டே வாழ்ந்தார். அலங்கார ஆபரணம், உடை துறந்து, எளிய உடைகளையே அணிந்தார். திரைப்படங்களிலும், நாடகங்களிலும், இதர ஆண்களோடு ஜோடியாக நடிக்க மறுத்து, தனியாகவே வாழ்ந்து வந்தார். இறுதிவரை, இவ்வாறே வாழ்ந்து, இயற்கை எய்தினார்.

ஹிந்தி படங்களில் நடித்த துணை நடிகை நிஷாநூர், தன் சொத்துக்களை இழந்து, எய்ட்ஸ் நோயாளியாகி, தெருவில் கிடந்து அநாதைப் பிணமானார்.
"கோழிகூவுது" படத்தில் அறிமுகமான நடிகை விஜி, இடுப்பு, முதுகுவலியால் பாதிக்கப்பட்டார். அவருக்கு, அப்பல்லோ மருத்துவமனையில், முள்ளந்தண்டுவட சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை தோல்வியடைந்ததுடன், அறுவைசிகிச்சை காயத்தில் நோய்த்தொற்றும் ஏற்பட்டது. தவிர, தற்காலிக பக்கவாதமும் ஏற்பட்டது. எனவே விஜி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்பல்லோ மருத்துவமனை அறுவைசிகிச்சை கட்டணத்தை, விஜிக்கு வழங்கி, வழக்கை முடித்துக்கொண்டது. மீண்டும் விஜிக்கு, அறுவைசிகிச்சை செய்யப்பட்டு குணமானார். "சிம்மாசனம்" என்ற படத்தில் நடித்தார். எனினும், அவரால், முன்புபோல இயல்பான, இனிமையான வாழ்க்கை வாழ இயலவில்லை. தவிர, தமிழ்ப்பட இயக்குநர் எம்.ஆர் ரமேசுடனான காதல் தோல்வியும், விஜி மனதை வாட்டவே, விஜி தற்கொலை செய்துகொண்டார். இறந்தபோது அவர் வயது 34 மட்டுமே.
கடன்தொல்லை, காதல்தோல்வி, நம்பிக்கைத் துரோகங்கள், உடல் உபாதைகள் உள்ளிட்ட பலவிதமான உடல்/மன உளைச்சல்களுக்கு ஆட்பட்டு, நடிகை சில்க்சுமிதா, தன் 36ஆம் வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
நடிகை காஞ்சனா, உறவினர்களின் சூழ்ச்சி காரணமாக, திருமணமும் செய்துகொள்ளாமல், நிறைய படங்களில் நடித்து சம்பாதித்த தன் சொத்துக்களையும், அவர்களிடம் இழந்தார். பின்பு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீண்டகால சட்டபோராட்டத்திற்குப் பிறகு, பெருமளவு சொத்துக்களை மீட்டார். அவற்றுள், பெருமளவு சொத்துக்களை, திருப்பதி கோவிலுக்கு அளித்துவிட்டு, தங்கையின் உதவியோடு, தீவிர ஆன்மீக வாதியாக, தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
தன்காதல் கணவர் சுகுமார், அவருடைய முதல் திருமணத்தை மறைத்துவிட்டு, தன்னை இரண்டாந்தாரமாக திருமணம் செய்துகொண்டதை ஏற்கமுடியாமல், மனஉளைச்சலுக்கு ஆளாகி, நடிகை படாபட் ஜெயலட்சுமி, தன் 22 வயதிலேயே, தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தமிழ்திரையுலகின் முதல் கதாநாயகி நடிகையும், தென்னிந்தியாவின் முதல் பெண் திரைப்பட இயக்குநருமான டி.பி.ராஜலட்சுமி, படங்களில் நடித்து, அதிக வருமானம் சேர்த்தார். ஒரு தெருவிலிருந்த அனைத்து வீடுகளுமே அவருடைய சொந்த வீடுகள் எனுமளவுக்கு வசதியாக வாழ்ந்தார். சொந்த படங்களைத் தயாரித்து, அவை தோல்வியடைவே, திரைப்பட வாய்ப்புகளும் வராமற் போகவே, சொத்துக்களை இழந்து, வாடகை வீட்டில் குடியேறினார். சில சமயங்களில், அவசர செலவுகளுக்கு, தான் வாங்கிய பதக்கங்கள், விருதுகளையும் விற்கவேண்டிய நிலைக்கு ஆளானார். இறுதியில், பக்கவாதநோய்க்கு ஆளாகி, குணமாக முடியாமலே மரணமடைந்தார்.
நடிகையர் திலகம் சாவித்திரியின், சோக வரலாறு அனைவரும் அறிந்ததே.
நடிகை ஶ்ரீவித்யா, காதல் தோல்வி, திருமண தோல்வி, நம்பிக்கை துரோகம், தாய்பாசத் தோல்வி, சொத்து இழப்பு, உள்பட, வாழ்வில் அடுத்தடுத்து அவலமான சோகங்களை எதிர்கொண்டு, இறுதியில் புற்றுநோய்க்கு ஆளாகி, 53 வயதிலேயே மரணமடைந்தார்.
ஓரளவு பிரபலமான நடிகையாக திரையுலகில், வளர்ந்து வரும்போதே, பிரசன்னா என்ற நடனஅமைப்பாளரைக் காதலித்து, அக்காதலில் தோல்வியடைந்து, வேதனை தாளாமல், தனது 21 வயதிலேயே, தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார் மோனல்.
காதல்தோல்வி, சிக்குன்குன்யாவால் ஏற்பட்ட உடல்பாதிப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளால், கடும் மனஉளைச்சலுக்கு ஆளான தமிழ் நகைச்சுவை நடிகை ஷோபனா, தன் 32 ஆம் வயதிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர், இறுதிவரை திருமணமே செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...