மகன் ஒரு கம்பெனில வேலைக்குச் சேர்ந்தராம். அவருக்குத் துணையாக அவருக்கு போஸ்டர் ஒட்டுற நண்பர் ஒருவரும் அதே கம்பெனில வேலைக்குச் சேர்ந்தாராம். விசேஷம் என்னவென்றால் இருவரும் ஒரே வேளையில் வேலைக்குச் சேர்ந்தார்களாம், ஒரே கம்பெனில வேலைக்குச் சேர்ந்தார்களாம். ஒரே பதவியில் அமர்ந்தார்களாம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Saturday, April 15, 2023
அப்புறம் என்னாச்சாம்.....?
அப்புறம் என்னாச்சாம், ரெண்டு பேரும் அரசியலில் சேரணும்னு முடிவு பண்ணினாங்களாம்.
இருவரும் ஒரே கட்சியில் சேரணும்னு முடிவு பண்ணினார்களாம்.
அப்புறம் என்னாச்சாம்.....?
அப்புறம் தேர்தல் வந்துச்சாம். உடனே ரெண்டு பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செஞ்சாங்களாம்.
ரெண்டு பேரும் தேர்தலில் நின்னாங்களாம்.
"ரெண்டு பேரும் ஒரே தொகுதியில் நின்னாங்களாமா?"
அவசரப்படாத. கதையை நான் சொல்றேன். முழுக்கக் கேளு.
ரெண்டு பேரும் ஒரே தொகுதியில் நிற்க முடியாதாம். அதனால தனி தனி தொகுதிகளில் நின்னாங்களாம்.
அப்புறமா, ரெண்டு பேரும் ஜெயிச்சாங்களாம். ரெண்டு பேரும் எம்எல்ஏ ஆனாங்களாம்.
அப்புறம் என்னாச்சாம்....?
அப்புறம் நண்பன் மட்டும்
உயர்பதவி கெடச்சுதாம். கொஞ்ச நாளுக்குப் பிறகு மகனுக்கும் உயர் பதவி கெடச்சுதாம்.
அதுக்குக் கொஞ்ச நாள் முன்னால, மகன் குடும்பம் மொத்தமும், அம்மா அப்பா உட்பட (வளர்ப்பு நாய் பூனை தவிர) வெளிநாடு போச்சாம்.
அப்புறம் என்னாச்சாம்......?
வெளிநாடு எதற்குப் போவாங்க? சும்மா ஜாலியா சுத்தி என்ஜாய் பண்றதுக்கு. அதானே? அதேதான்! வெளிநாடு போனவங்க எல்லாரும் நல்லா என்ஜாய் பண்ணினாங்களாம்.
ஆனா டாஸ்மாக் போதைல மயங்கி கிடக்குற தமிழனுக்கு என்ன சொன்னாங்களாம்? ஆயிரமாயிரம் கோடி ரூபாய் முதலீடு திரட்டி வருகிறோம், மாநிலத்தில் புதிய தொழில்கள் தொடங்குவோம் என்றெல்லாம் கதை விட்டார்களாம்.
டாஸ்மாக் தமிழனும் அதை நம்பி இன்னும் அதிகமா சரக்கு அடிச்சானாம்!
வெளிநாடு போனவங்க எல்லாரும் திரும்பி வந்தாங்களாம். ஆனா முதலீடு மட்டும் வரவே இல்லையாம். டாஸ்மாக் தமிழனும் சரக்கடிச்சு, சரக்கடிச்சு சாக்கடையில் விழுந்து கிடக்கிறதையே பெருமையா நினைச்சுக்கிட்டு அப்படியே இன்னை வரை செஞ்சிகிட்டு இருக்கானாம்.
அப்புறம் என்னாச்சாம்.....?
ம்ம்? இன்னிக்கி கதை கேட்டது போதும். நீ கண்ணை மூடிக்கிட்டு தூங்கு.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
No comments:
Post a Comment