Saturday, April 15, 2023

டெல்லியில் கேஜ்ரிவால் ஒவ்வொரு வீடாக நுழைந்தது போல பாஜக இப்போது இந்த ஊழல் விஷயத்தை வீடுவீடாக ப்போய்ப்பேசவேண்டும்.

 அண்ணாமலையாரின் டிஎம்கே ஃபைல்ஸ் வெளியீட்டிற்கு பிறகு என்ன மாதிரியான விஷயங்கள் அரங்கேறி வருகிறது?

* ஊடகங்களின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது. கவரேஜ் செய்ததில் காட்டிய ஆர்வத்தில் ஒரு பங்கினை கூட ஒளிபரப்புவதில் காட்டவில்லை.
* சமீபத்தில் ஒரு நடிகர் உயிரிழந்த போது, கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தில், நூறில் ஒரு பங்கு கூட தரப்படவில்லை என்பது வேதனையான விஷயம்.
* திமுக மேல்மட்ட தரப்பில் ஆழ்ந்த அமைதி காக்கப்படுகிறது. பதிலடி தருகிறோம் என்று இறங்கினால், விஷயம் வெகுஜனங்களின் கவனத்தை ஈர்த்துவிடும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
* திமுக தரப்பில் கருத்து தெரிவித்த மிக சிலர் கூட, மேம்போக்காக பதிலளித்தனரே தவிர, அண்ணாமலைக்கு ஆக்ரோஷமான எதிர்ப்பினை காட்டவில்லை.
காரணம் 1, 2, 3, ... என பட்டியல் பெரிதாகும் போது, ஊழல் விவகாரம் பெரிதாக பேசப்பட்டு, ஆணிவேரையே அசைத்து விடுமே.
* லெட்டர் பேடுகள் பலவும் தங்களது திமுக விசுவாசத்தை வெளிக்காட்ட, குதித்து வருகின்றன.
* காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் என கூட்டணிகள் பலரும்
அரசியல் தர்மத்தை மறந்து,
சொத்துக் குவிப்பு ஒரு பெரிய விஷயம் இல்லை என்பது போல,
எதிர்கால சீட்டு அரசியலில் ஆதாயம் பெறும் நோக்கில் பலமாக முட்டு கொடுத்து வருகின்றனர்.
* ஆட்சிக்கு எதிரான ஊழல்கள் குறித்த பேச்சினை எளிதாக மடைமாற்றி விட முடியும். ஆனால் தாங்கள் குவித்து வைத்துள்ள பல ஆயிரம் கோடிகள் சொத்துக்களை பற்றிய பட்டியலை முழுவதுமாக பொதுவெளியில் தொடர்ந்து பகிர்ந்தால்,
அது பொது மக்களிடையே பெரிய அளவில் பேசு பொருளாகி விட்டால்,
அது மக்களிடையே பலவிதமான அபிப்பிராயங்களை ஏற்படுத்தும்,
அதோடு தங்களது இலவச அரசியலும் எடுபடாமல் போகும் வாய்ப்புகள் உருவாகுமோ என்ற அச்சம் திமுகவினருக்கு ஏற்பட்டுள்ளது.
* திமுகவின் சொத்து குவிப்புகளுக்கு சற்றும் சளைக்காத அளவில் இருக்கிறது அதிமுகவினரின் சொத்து மதிப்பு.
அதனால் அதிமுகவினரும் கதிகலங்கி போயுள்ளது நிதர்சனம்.
* நீண்ட கால திராவிட எதிர்ப்பாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஒளி பிறந்துள்ளது. அவை ஒரே புள்ளியில் ஐக்கியமாகும் நிலை தொடங்கிவிட்டது. இனி அது விஸ்வரூபம் எடுக்கும். திராவிட கூட்டத்தை எதிர்க்க மாபெரும் சக்தி உருவாகி வருகிறது. இதில் எதிர்பாராத விதமாக பழைய காங்கிரஸார் பலரும் தனிப்பட்ட ஆதரவினை பகிர்வார்கள்.
* அண்ணாமலையாரின் ஃபைல்ஸ் எந்த அளவுக்கு மக்களிடையே ரீச் ஆகிறது என்பது அதி தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது. இருபத்து ஐந்து சதவீதம் பேரை தாண்டி விவரம் போய் சேர்ந்து விட்டது என்பது தெரிய வந்தவுடன் வெளிப்படையாக அண்ணாமலை குறிவைக்கப்படுவார், அண்ணாமலைக்கு நெருக்கமாக உள்ளவர்கள் குறிவைக்கப்படுவார்கள்.
* பாஜகவின் கோட்டையில், அமர் பிரசாத் இருக்கும் பகுதியில் ஓட்டை விழும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். எவ்வளவு விரைவில் அதை சரி செய்ய முடியுமோ, அதை செய்து முடிக்க வேண்டும்.
ஆளும் தரப்பில் அனைவரும் குறிவைத்து களமிறங்க தொடங்கும் முன்,
பாஜகவின் பலவீனங்களை கண்டறிந்து சரி செய்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
களத்தில் உள்ள பாஜக தொண்டர்களுக்கு மட்டும் :
பாஜக தொண்டர்கள் இனி அமைப்புரீதியாக ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.
தனிப்பட்ட முறையில் இதை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதாக இருந்தால், பொது மக்களிடம் மட்டுமே சிறிய அளவில் விவாதித்து கொண்டு சேருங்கள்.
ஆனால் சம்பந்தப்பட்ட நபர் அதிமுக அல்லது திமுகவை சேர்ந்தவர் என்றால் விவாதத்தை முடித்துக் கொள்ளுங்கள். உங்களது ஆக்ரோஷமான பதில் வாதங்கள் மூலமாக உள்ளூரில் தனிப்பட்ட அரசியல் பகைகளை உருவாக்கி கொள்ள வேண்டாம்.(பல்வேறு மோசமான முன் உதாரணங்களை பொதுவெளியில் பகிர விரும்பவில்லை). இதை எப்போதும் மறக்க வேண்டாம்.
பாஜகவினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும் போது, மக்கள் மனநிலையில் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வர முடியும்.
அரசியல் சாக்கடை தான் என்பதை நிரூபிக்கும் வகையில்,
ஏதேனும் ஜாதி, மத கலவரங்கள் தூண்டிவிடப்பட்டு பாஜகவின் மீதே பலி சுமத்தி தனிமைப்படுத்தும் முயற்சிகளும் இனி அரங்கேற்றப்பட கூடும். எனவே பாஜகவினர் கூடுதல் விழிப்புணர்வு உடன் செயல்பட வேண்டும்.
தனிப்பட்ட முறையிலான வாக்குவாதங்களை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அது உங்களது நோக்கத்தை திசை திருப்பி, தனிப்பட்ட பகையை சம்பாதித்து தரும் அளவுக்கு மோசமாகி விட கூடாது.
எந்த சூழலிலும் மேலிடத்தை தொடர்பு கொள்ள மறக்க வேண்டாம்.
தமிழகம் மோசடியாளர்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அதே நேரம் ஒரு ஒரு பாஜக தொண்டனின் பாதுகாப்பும் நமக்கு முக்கியம்.
மீண்டும் சொல்கிறேன். பாஜகவினர் அமைப்புரீதியாக ஒருங்கிணைந்து, விவேகத்துடன் செயல்படுங்கள்.
நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை 2024 தேர்தல் முடிவுகள் காட்டும்.
இருப்பது ஒரே உயிர்,
அது தேசத்தின் மீட்சிக்கான போராட்டத்தில் பறி போனாலும் விதையாவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...