Thursday, April 13, 2023

சபரிமலையில் நாளை மறுநாள் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி .

 கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி நேற்று முன்தினம் மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் நடை பெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நாளை மறுநாள் நடக்கிறது. சித்திரை முதல் நாளில் இறைவன் முன்பு படைக்கப்படும் காய், கனி வகைகளை பார்த்து சாமி தரிசனம் செய்தால் அந்த ஆண்டு இனிமையாகவும், வளமையாகவும் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதற்காக சித்திரை விஷூ நாளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதற்காக அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அப்போது காய்,கனிகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பூஜைகள் முடிந்த பின்னர் சாமி முன்பு படைக்கப்பட்ட காய், கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதுபோல கைநீட்டமும் அளிக்கப்படும். இதனை கோவில் தந்திரி மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோர் வழங்குவார்கள். சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சிக்காக திறக்கப்படும் கோவில் நடை வருகிற 19-ந் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...